துணை நடிகர்களிடம் கமிஷன் அடிச்சிருக்கான்... இப்படி பண்ணா விளங்குமா? - அட்லீயை டார்டாராக கிழித்த கே.ராஜன்

First Published | Mar 22, 2023, 12:42 PM IST

பிகில் படத்தில் நடிக்க வந்த 5 ஆயிரம் துணை நடிகர்களுக்காக கொடுக்கப்பட்ட சம்பளத்தில் இருந்து அட்லீ 10 சதவீதம் கமிஷன் அடித்ததாக கே.ராஜன் சாடி உள்ளார்.

ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, அடுத்தடுத்து நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்ததன் மூலம் முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இதையடுத்து இவருக்கு ஷாருக்கான் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இந்தியில் ஜவான் என்கிற படத்தை இயக்கி வருகிறார். ஷாருக்கான் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இப்படி அட்லீ கெரியர் உச்சத்தை தொட்டாலும், அவர்மீதான விமர்சனங்கள் என்பது அவரை விடாமல் துரத்தி வருகிறது. குறிப்பாக அவர் எடுத்த படங்கள் அனைத்துமே காப்பி அடிக்கப்பட்ட படங்கள் என தொடர்ந்து ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன. அவர் தமிழில் கடைசியாக இயக்கிய விஜய்யின் பிகில் படமும் ஷாருக்கான் நடித்த சக்தே இந்தியா என்கிற பாலிவுட் படத்தின் காப்பி தான் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதையெல்லாம் பொருட்படுத்தாத அட்லீ, அடுத்தடுத்த உயரங்களை எட்டி வருகிறார்.

Tap to resize

இந்நிலையில், மிர்ச்சி சிவா நடித்துள்ள காசேதான் கடவுளடா திரைப்படம் வருகிற மார்ச் 24-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. கண்ணன் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே.ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது அவர் மேடையில் பேசும்போது இயக்குனர் அட்லீயையும் அவர் இயக்கிய பிகில் படத்தையும் வெளுத்து வாங்கினார்.

இதையும் படியுங்கள்... ரஜினி மகள் வீட்டில் அபேஸ் பண்ணிய நகையை வைத்து ரூ.1 கோடிக்கு சொத்து வாங்கிய பணிப்பெண் - வெளிவந்த திடுக் தகவல்

அவர் பேசியதாவது : “ஷாருக்கானின் சக்தே இந்தியா படத்தை தான் பிகில் என்கிற பெயரில் அட்லீ எடுத்துள்ளார். அதுல ஹாக்கி, இதுல கால்பந்து. தயாரிப்பாளரை எட்டி எட்டி உதைத்துவிட்டார் இயக்குனர். ஏஜிஎஸ் பெரிய கம்பெனி என்பதால் அப்படத்தை சமாளித்தார்கள். 5 ஆயிரம் ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகளை நடிக்க வைத்துவிட்டு அதுல 10 சதவீதம் கமிஷன் வாங்கி உள்ளார் இயக்குனர். 

தயாரிப்பாளர்களிடம் 30 கோடி, 40 கோடினு சம்பளம் வாங்கிட்டு ஜூனியர் ஆர்டிஸ்ட் சம்பளத்தில் 10 சதவீதம் கமிஷன் வேற வாங்குறது. ஞாயமா இதெல்லாம். நிக்குமா இந்த பணம். அதனால தான் நீ எடுத்த படம் ரெண்டுமே அவுட்டு. இவர்கள் எல்லாம் துரோகிகள்” என சரமாரியாக அட்லீயை வெளுத்து வாங்கி இருக்கிறார் கே.ராஜன். அவரின் இந்த பேச்சை கேட்டு நடிகர் மிர்ச்சி சிவா விழுந்து விழுந்து சிரித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... பேஷன் ஷோவுக்கு தங்க நெக்லஸ் போட்டுட்டு வந்தது குத்தமா? நடிகை டாப்ஸியை ரவுண்டு கட்டி விளாசும் நெட்டிசன்கள்

Latest Videos

click me!