cannes 2022 :லேடி சூப்பர்ஸ்டார்னா சும்மாவா.. கேன்ஸ் திரைப்பட விழாவில் நயன்தாராவுக்கு காத்திருக்கும் ராஜமரியாதை

First Published | May 11, 2022, 4:02 PM IST

cannes 2022 : கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரைப்பிரபலங்கள் பங்கேற்பது வழக்கமான ஒன்று தான், இருந்தாலும், நயன்தாரா, ஏ.ஆர்.ரகுமான், மாதவன், பூஜா ஹெக்டே என அதிகளவில் தென்னிந்திய பிரபலங்கள் சிவப்பு கம்பள வரவேற்பை பெறுவது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. 

உலகப்புகழ் பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா வருகிற மே 17-ந் தேதி பிரான்ஸ் நாட்டில் நடைபெற உள்ளது. உலகெங்கிலும் இருந்து ஏராளமான திரைப்பிரபலங்கள் இந்த விழாவில் கலந்துகொள்வர். ஆனால் இதில் சிவப்பு கம்பள வரவேற்பு கிடைப்பதோ ஒரு சிலருக்குத் தான். அத்தகைய வரவேற்பை பெறுவதை பிரபலங்கள் மிகப்பெரிய கவுரவமாக கருதுகின்றனர்.

அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற உள்ள 75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில், இந்திய திரைத்துறை சார்பில் 12 சினிமா நட்சத்திரங்கள் அடங்கிய குழு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தலைமையில் பங்கேற்க உள்ளது. 

Tap to resize

அக்குழுவில் இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமான், ரிக்கி கேஜ், பாலிவுட் நடிகர்கள் அக்‌ஷய் குமார், நவாசுதீன் சித்திக், மாதவன் மற்றும் நடிகைகள் நயன்தாரா, தமன்னா, பூஜா ஹெக்டே, வாணி திரிபாதி ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர். இவர்களுடன் பாடகர் மாமே கான், தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி மற்றும் தயாரிப்பாளர் சேகர் கபூர் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரைப்பிரபலங்கள் பங்கேற்பது வழக்கமான ஒன்று தான், இருந்தாலும், நயன்தாரா, ஏ.ஆர்.ரகுமான், மாதவன், பூஜா ஹெக்டே என அதிகளவில் தென்னிந்திய பிரபலங்கள் சிவப்பு கம்பள வரவேற்பை பெறுவது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. 

மேலும் இந்த விழாவில் வழங்கப்படும் விருதுக்களுக்கான தேர்வுக்குழுவில் நடிகை தீபிகா படுகோனே ஜூரியாக உள்ளார். இதுதவிர நடிகர் மாதவன் இயக்கியுள்ள ராக்கெட்ரி படம் இவ்விழாவில் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படியுங்கள்... Rajinikanth : சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?... விரைவில் அமெரிக்கா செல்லும் ரஜினி - பின்னணி என்ன?

Latest Videos

click me!