இதற்கான காரணத்தை சமீபத்திய பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் போட்டுள்ளதாகவும், இதன்காரணமாகவே அவர்கள் தயாரிக்கும் படங்கள் வேறு யாருக்கும் கொடுப்பதில்லை என கூறி உள்ள உதயநிதி, அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தை வருகிற ஜூலை 1-ந் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்தார்.
இதுதவிர சிவகார்த்திகேயனின் டான், கமல் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி உள்ள விக்ரம், மாதவனின் ராக்கெட்ரி ஆகிய படங்களின் வெளியீட்டு உரிமையையும் உதயநிதி தான் கைப்பற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ‘பத்தல பத்தல’னு அனிருத் போட்ட தர லோக்கல் சாங்... 67 வயதிலும் அசராமல் குத்தாட்டம் போட்ட கமல் - விக்ரம் அப்டேட்