காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது ஓ2 திரைப்படம் உருவாகி உள்ளது. ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கியுள்ள இப்படம் விரைவில் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளது. இதைத்தொடர்ந்து சிரஞ்சீவியின் காட்ஃபாதர், ஷாருக்கானுடன் லயன், மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் கோல்டு போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில், நடிகை நயன்தாரா, அடுத்ததாக நடிக்க உள்ள தமிழ் படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான எம்.எஸ்.தோனி தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் படங்களின் மீதுள்ள காதலால் அவர் இப்படத்தை தயாரிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
தோனி நடித்த விளம்பரத்தை அண்மையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். ஆதலால் தோனி தயாரிப்பில் நயன்தாரா நடிக்க உள்ள படத்தையும் அவரே இயக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இப்படத்தின் படப்பிடிப்பை முதலில் இம்மாத இறுதியில் தொடங்க திட்டமிட்டிருந்தார்களாம்.