தமிழ் திரையுலகில் மோனிஷா என் மோனலிசா என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மும்தாஜ். இதையடுத்து குஷி, ஸ்டார், ரோஜாக்கூட்டம், ராஜாதி ராஜா என பல திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதில் ஷாரிக், தாடி பாலாஜியின் மனைவி நித்யா ஆகியோருடன் மும்தாஜ் சண்டையிட்டது பரபரப்பாக பேசப்பட்டது.