டாக்டர் படத்தை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார்.
26
don
இப்படத்தின் டாக்டர் நாயகி பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, பால சரவணன், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
36
don
நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்துள்ள இந்த படத்திலிருந்து முன்னதாக அனிரூத் இசையமைப்பில் 3 பாடல்கள் வெளியாகி வைரலாகின.
46
DON
படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி ரிலீஸ் செய்வதாக இருந்தனர். பின்னர் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு மே 13-ந் தேதி இப்படத்தை வெளியிட உள்ளதாக அறிவித்தனர்.
56
don
சமீபத்தில் ட்ரைலர் வெளியாகி மாஸ் காட்டிய டான் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
66
DON
இந்நிலையில் சிவகார்த்திகேயனின் டான் படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. படம் வெளியாகி 4 வாரங்களுக்கு பின் நெட்பிளிக்ஸில் டான் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.