நெஞ்சுக்கு நீதி உண்மை நாயகி இவர்கள் தான்..கலக்கல் உண்மையை உடைத்த உதயநிதி..

Kanmani P   | Asianet News
Published : May 10, 2022, 07:46 PM IST

நெஞ்சுக்கு நீதி டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய உதயநிதி இந்த படத்தின் உண்மையான ஹீரோயினி  குறித்து கலகலப்பாக கூறியுள்ள தகவல் வைரலாகி வருகிறது.

PREV
17
நெஞ்சுக்கு நீதி உண்மை நாயகி இவர்கள் தான்..கலக்கல் உண்மையை உடைத்த உதயநிதி..
nenjukku needhi

சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நெஞ்சுக்கு நீதி’.  இந்த படத்தை இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கி உள்ளார்..

27
nenjukku needhi

இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ஆர்ட்டிக்கிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்தை  வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார்.

37
nenjukku needhi

இந்த படத்தில் மயில்சாமி, சரவணன், ஆரி அர்ஜுனன், ஷிவானி ராஜசேகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

47
nenjukku needhi

முதல் முறையாக உதயநிதி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இதில் நாயகியாக கருப்பன் பட நடிகை தன்யா நடித்துள்ளார்.

57
nenjukku needhi

நெஞ்சுக்கு நீதி படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். இதற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

67
nenjukku needhi

முன்னதாக இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன அடுத்து இந்த படத்தின் ட்ரைலர்  டிரைலர் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ வெளியான 20 மணி நேரத்தில் 1.9 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது. 

77
nenjukku needhi

நெஞ்சுக்கு நீதி ட்ரைலர் வெளியிட்டு விழாவில் பேசிய உதயநிதி, ' நாயகி இருந்தாலும், சுரேஷ் சக்கரவர்த்தி, மயில்சாமி இருவரும் தான் என்னுடன் படம் முழுவதும் வருவார்கள். இவர்கள் தான் உண்மையான  ஹீரோயின்கள் என கலப்பாக கூறியுள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories