பாலிவுட்டில் எனக்கு வாய்ப்பு அளிக்க மாட்டார்கள். அதனால் நான் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என மகேஷ்பாபு பதில் கூறியிருப்பது. மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் தற்போது 'சர்காரு வாரி பாட்டா' படத்தில் நடித்துள்ளார்.
28
sarkaaru vaari paata
இந்த படத்தை இயக்குனர் பருசுராம் பெட்லாவி இயக்கியுள்ளார். மாஸ், ஆக்ஷன் திரைப்படமான 'சர்காரு வாரி பாட்டா ' படத்தில் சமுத்திரக்கனி, வெண்ணெல கிஷோர் மற்றும்ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
38
sarkaaru vaari paata
இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ் பாபு என்டர்டெயின்மென்ட் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இதிலிருந்து சித் ஸ்ரீராம் பாடியிருந்த கலாவதி' பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இந்த பாடல் மூலம் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தது..
58
sarkaaru vaari paata
பின்னர் 105 காட்சிகளுடன் வெளியான ட்ரைலர் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் வரும் மே 12-ம் தேதி வெளியாக உள்ளது.
68
mahesh babu
இதையடுத்து படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பேசிய மகேஷ் பாபு பான் இந்தியா படம் குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
78
Mahesh Babu
செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய மகேஷ் பாபு',"தெலுங்கில் மட்டுமே எப்போதும் நடிக்க ஆசை. அதை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பார்த்து ரசிக்கட்டும். இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
பாலிவுட்டில் எனக்கு வாய்ப்பளிக்க மாட்டார்கள். அதனால், நான் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. இங்கு தெலுங்கில் எனக்குக் கிடைக்கும் அன்பு, நட்சத்திர அந்தஸ்து ஆகியவை நிறைவாக கிடைக்கும் போது வேறு திரையுலகத்திற்கு செல்ல எண்ணவில்லை. என பளிச்சென்று பேசியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.