நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் தலைவர் 169. பீஸ்ட் படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்க உள்ள இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
அனிருத் இசையமைக்க உள்ள இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், கன்னட நடிகர் ஷிவ் ராஜ்குமார், பிரியங்கா மோகன், ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பை வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர். இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன் நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல உள்ளாராம். வழக்கமாக மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்லும் ரஜினி, இம்முறை அங்கு சில நாட்கள் தங்கி ஓய்வெடுப்பதற்காக செல்ல உள்ளாராம்.