டோலிவுட்டில் பிசியான நயன்தாரா... சிரஞ்சீவியை தொடர்ந்து 65 வயது ஹீரோவுடன் ஜோடி சேரும் நயன்..!

Published : Oct 27, 2025, 04:08 PM IST

கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் தெலுங்கில் உருவாக உள்ள பிரம்மாண்ட திரைப்படத்தில் 65 வயது ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம் நயன்தாரா. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
Nayanthara Next Movie

நயன்தாரா நாயகியாக நடித்த கடைசிப் படம் 'டெஸ்ட்'. அப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. அந்தப் படத்தில் நயன்தாராவுடன், மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்திருந்தனர். ஒய் நாட் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பாளர் சஷிகாந்த் முதல்முறையாக இயக்கிய படம் தான் 'டெஸ்ட்'. நயன்தாராவின் மற்றொரு படமும் படமாக்கப்பட்டு வருகிறது. செந்தில் நல்லசாமி இயக்கும் இந்தப் படம் பெரிய பட்ஜெட்டில் தயாராவதாகக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

24
தெலுங்கில் பிசியான நயன்

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பிசியாக உள்ள நயன்தாரா, தொடர் ஹிட் படங்களை கொடுக்கும் இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா மீண்டும் இணைவது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தப் படத்திற்காக நயன்தாரா வெறும் ஆறு கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக கேட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

34
பாலகிருஷ்ணாவுடன் ஜோடி சேரும் நயன்தாரா?

இந்த நிலையில், நடிகை நயன்தாரா கமிட்டாகி உள்ள அடுத்த தெலுங்கு படம் பற்றிய அப்டேட் வந்துள்ளது. அதன்படி, பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் உருவாக உள்ள வரலாற்று கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாரா கமிட்டாகி உள்ளார். இப்படத்தில் ஹீரோவாக பாலகிருஷ்ணா நடிக்க இருக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க உள்ளதாம். இப்படத்தின் மூலம் நயன்தாராவும், பாலகிருஷ்ணாவும் 14 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்து நடிக்க உள்ளனர். கடைசியாக இவர்கள் இருவரும் ஸ்ரீ ராமராஜ்ஜியம் என்கிற திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

44
14 ஆண்டுகளுக்கு பின் இணையும் கூட்டணி

ஸ்ரீ ராமராஜ்ஜியம் திரைப்படத்தில் பாலகிருஷ்ணா ராமராகவும், நயன்தாரா சீதாவாகவும் நடித்திருந்தனர். இப்படத்தோடு அந்த சமயத்தில் சினிமாவை விட்டு விலகுவதாக நயன்தாரா அறிவித்திருந்தார். இதனால் இப்படம் கவனம் ஈர்த்தது. ஆனால் அதன்பின் பிரபுதேவா உடன் காதல் முறிவு ஏற்பட்டதால் மீண்டும் சினிமாவில் பிசியாகி நடிக்கத் தொடங்கிய நயன்தாரா, அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து லேடி சூப்பர்ஸ்டாராகவும் கொண்டாடப்பட்டார். தற்போது திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள போதிலும் சினிமாவில் டாப் ஹீரோயினாக கோலோச்சி வருகிறார் நயன்.

Read more Photos on
click me!

Recommended Stories