கவிஞர் வாலி கோபத்தில் MGR-க்கு எழுதிய பாடல்... பட்டிதொட்டியெங்கும் ஹிட்டான கதை தெரியுமா..?

Published : Oct 27, 2025, 03:32 PM IST

கவிஞர் வாலி அதிக ஹிட் பாடல்களை கொடுத்துள்ளது எம்ஜிஆருக்கு தான், அப்படி அவருக்காக கோபத்தில் வாலி எழுதிய பாடல் ஒன்று காலம் கடந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதைப்பற்றி பார்க்கலாம்.

PREV
14
Lyricist Vaali Song Secret

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் கவிஞர் வாலி தான். அவரின் வரிகளில் உருவான பாடல்கள் காலம் கடந்து இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. சுமார் 50 ஆண்டுகள் தமிழ் சினிமாவில் ஏராளமான ஹிட் பாடல்களை எழுதிய வாலி, இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவரின் பாடல்கள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளன. வாலி அதிக ஹிட் பாடல்களை கொடுத்த நடிகர் என்றால் அது எம்ஜிஆர் தான். அப்படி எம்ஜிஆருக்கு அவர் எழுதிய ஒரு கிளாசிக் ஹிட் பாடல், ரசிகர்கள் அவர் ஈகோவை சீண்டியதால் உருவான கதையை தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

24
அன்பே வா பட பாடல் ரகசியம்

அன்பே வா படத்தின் கம்போசிங்கிற்காக எம்.எஸ்.விஸ்வநாதனிடம் இருந்து வாலிக்கு ஒரு அழைப்பு வருகிறது. அங்கு செல்லும் முன் ஒரு டீ சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என முடிவு செய்து டீ குடிக்க சென்றிருக்கிறார் வாலி. அப்போது, அங்கு எம்ஜிஆர் நடிப்பில் வெளிவந்த பணத்தோட்டம் படத்தில் இடம்பெற்ற பேசுவது கிளியா என்கிற பாடல் ஒலிபரப்பாகிக் கொண்டு இருந்ததாம். அந்தப் பாடலைக் கேட்டு அங்கிருந்த இரண்டு எம்ஜிஆர் ரசிகர்கள், தலைவருக்கு காலமெல்லாம் நிற்கும் விதமாக பாடல் எழுத வேண்டும் என்றால் அது கவிஞர் கண்ணதாசனால் மட்டும் தான் முடியும், வேறு யாராலும் முடியாது என கூறி இருக்கிறார்கள்.

34
வாலி கோபத்தில் எழுதிய பாடல்

அதைக் கேட்ட வாலிக்கு கோபம் வந்திருக்கிறது. அந்த கோபத்தை அங்கு வெளிப்படுத்தாமல், அப்படியே ஏவிஎம் ஸ்டூடியோவுக்கு வந்திருக்கிறார். அங்கு அன்பே வா பாடல் கம்போசிங்கிற்காக அமர்ந்திருந்த எம்.எஸ்.வி. டியூன் வாசித்துக் காட்டி இருக்கிறார். எம்ஜிஆர் தன் ஈகோவை சீண்டிய வெறியில் இருக்கும் வாலி, அந்த பாடல் சிச்சுவேசன் கேட்டு ஒரு 10 நிமிடத்திற்கு அமைதியாக மனதிற்குள் யோசித்துவிட்டு, பின்னர் எழுதிய வரிகள் தான்... ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியை தான் நல்ல அழகி என்பேன்.. நல்ல அழகி என்பேன்’ என எழுதி இருக்கிறார். இதைக்கேட்டு எம்.எஸ்.வியும் இம்பிரஸ் ஆகிவிட்டாரம்.

44
முத்தத்தை பரிசாக கொடுத்த எம்ஜிஆர்

பாடல் கம்போசிங் முடிந்த பின்னர் எம்.ஜி.ஆருக்கு இந்த பாடலை போட்டுக் காட்டி இருக்கிறார்கள். வாலியை ஆண்டவர் என அழைக்கும் எம்ஜிஆர், அந்த பாடலை கேட்டதும், ஆண்டவர் எங்க என கேட்க, அங்கு வந்த வாலியிடம் என்னமா எழுதிருக்கீங்க... எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ஆண்டவரே என சொல்லி ஒரு முத்தத்தை பரிசாக கொடுத்தாராம் எம்ஜிஆர். அந்த பாடலில் உள்ள, அந்த இயற்கையும் அவள்மேல் காதல் கொள்ளும்... அவள் நினைவாலே என் காலம் செல்லும் போன்ற வரிகள் எல்லாம் டாப் நாட்ச் ஆக இருக்கும். இந்தப் பாடலை வாலி கோபத்தில் எழுதினார் என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories