பிக்பாஸ் 9 வீட்டை விட்டு வெளியேறிய... ஆதிரைக்கு அள்ளிக்கொடுக்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Published : Oct 27, 2025, 04:01 PM IST

How Much Salary Adhirai Received: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிய ஆதிரையின் சம்பளம் குறித்த தகவலை பார்ப்போம்.

PREV
15
ஆர்வத்தை தூண்டும் பிக்பாஸ்:

விஜய் சேதுபதி, பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வரும் சீசன் 9 நிகழ்ச்சி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், அக்டோபர் 5-ந் தேதி துவங்கியது. இதுவரை வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பார்த்து ரசித்த பிரபலங்களின் உண்மை முகம் பற்றி அறிந்து கொள்வதிலும் யார் யார் இந்த முறை கலந்து கொள்வார்கள் என்பதை தெரிந்து கொள்வதிலும் ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.

25
முட்டி மோதும் போட்டியாளர்கள்:

அதே போல் சில சர்ச்சையான போட்டியாளர்களை களமிறக்கி கன்டென்ட் கொடுக்க வைக்கிறது பிக் பாஸ். பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர்கள் பட்டியல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது ஒருபுறம் இருந்தாலும், போட்டியாளர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்த மறந்து, சண்டை போடுவதை மட்டுமே சிறப்பாக செய்து வருகிறார்கள்.

35
திருந்தாத பாரு:

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட ஹவுஸ் மேட்ஸை இதுகுறித்து பேசி, வெளுத்து வாங்கினார் விஜய் சேதுபதி. எனவே இந்த வாரம், சௌண்டு விட்டு திட்டு வாங்கிய கம்ருதீன், பாரு ஆகியோர் வரும் வாரங்களில் கொஞ்சம் அடக்கி வாசிப்பார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்கமாட்டேன் என, பாரு இன்றைய முதல் புரோமோவிலேயே தன்னுடைய கச்சேரியை துவங்கி விட்டார்.

45
கனியுடன் வந்த பிரச்சனை:

கனியின் ஆடைகளை தரையில் வைத்தது பிரச்சனையாக வெடித்தது. கனி, பாரு சாரி கேட்கவில்லை என்றால் சாப்பிடமாட்டேன் என கூற, பின்னர் ஒருவழியாக சாரியை கூட கோபத்துடன் கூறியதை பார்க்க முடிந்தது. இதன் மூலம் பாரு இந்த வாரமும், தன்னுடைய சண்டை போடும் ஸ்டேடர்ஜியை சிறப்பாக கடைபிடிப்பார் என தெரிகிறது.

55
ஆதிரையின் சம்பளம்:

தற்போது நேற்று பிக்பாஸ் வீட்டை விட்டு, வெளியே செல்ல மனம் இல்லாமல் வெளியேறிய, மகாநதி சீரியல் நடிகை ஆதிரையின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆதிரைக்கு ஒரு நாளைக்கு ரூ.12,000 முதல் 15,000 வரை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. அவர் மொத்தம் 21 நாட்கள் உள்ளே இருந்த நிலையில், சுமார் 3,15,000 ரூபாயுடன் வெளியேறி உள்ளார். இதுவரை வெளியேறிய போட்டியாளர்களின் அதிக தொகையுடன் வெளியேறிய போட்டியாளர் இவர் தான் என கூறப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories