
ஜூன் மாதம் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை காதல் கரம் பிடித்தார் நயன்தாரா. மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமண விழாவில் ஷாருக்கான், ரஜினிகாந்த், மணிரத்தினம், அனிருத், விஜய் சேதுபதி, சூர்யா என முக்கிய பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். சூப்பர் ஸ்டார் தாலி எடுத்துக் கொடுக்க விக்னேஷ் சிவன் நயன்தாராவின் திருமணம் தடபுடலாக நடைபெற்றது. இதனை அடுத்து இவர்கள் இரண்டு முறை ஹனிமூன் சென்ற புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வெளியாகி வாழ்த்துக்களை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நயன்தாராவின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது ஊடகங்களில் உலா வருகிறது. கடந்த 2003 ஆம் ஆண்டு மலையாள திரைப்படம் மூலம் அறிமுகமான நயன்தாரா, தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் டாப் 10 வரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளார். தமிழில் முன்னணி நாயகர்களுக்கு ஜோடி போட்ட இவர் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு...கனடாவில் சிறந்த புராண படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிபி சத்யராஜின் மாயோன்...
தற்போது ஜெயம் ரவியுடன் ஒரு படத்திலும் ஷாருக்கானுடன் ஜவான் படத்திலும் பிஸியாக நடித்து வரும் நயன்தாராவின் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இவரது சொத்து மதிப்பு சுமார் 22 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 165 கோடி எனக் கூறப்படுகிறது.
20 நாள் கால்ஷீட்டிற்கே ரூபாய் 10 கோடி சம்பளம் வாங்குகிறார். இதன் மூலம் தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் ஒருவராக மாறியுள்ளார் நயன்தாரா. அதேபோல .பிராண்டு ஒப்பந்தங்களுக்காக சுமார் ஐந்து கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். உஜாலா மற்றும் பல பிரபலமான பிராண்டுகளின் விளம்பரங்களில் இவர் நடித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...மீண்டும் இயக்குனராகும் சிம்பு...10 கதைகள் ரெடியாம்..அவரே சொன்ன சூப்பர் அப்டேட் இதோ
இவருக்கு சொந்தமாக ஹைதராபாத்தில் இரண்டு ஆடம்பர வீடுகள் மற்றும் சென்னைகள் 4 BHK வீடுகள், கேரளாவில் உள்ள அவரது பெற்றோர் வீடுகள் உட்பட இந்தியா முழுவதும் பல குடியிருப்புகளை சொந்தமாக வைத்திருக்கிறார் நயன்தாரா. ஹைதராபாத் அடுக்குமாடி குடியிருப்புகள் ஒவ்வொன்றுக்கும் சுமார் 15 கோடி ரூபாய் செலவாகும் என்றும் இவை தெலுங்கு திரையுலகில் ஏ லிஸ்ட் பிரபலங்கள் வசிக்கும் பஞ்சாரா ஹெல்ஸில் அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதோடு அவரது இரண்டு சென்னை வீடுகளில் ஒவ்வொன்றும் நூறு கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நயன்தாரா சமீபத்தில் ஒரு தனியார் ஜெட் ஒன்றையும் வாங்கியுள்ளார். அது முக்கியமாக அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அடிக்கடி சென்னை மற்றும் ஹைதராபாத் மற்றும் சென்னை - கொச்சி பயணங்கள் மேற்கொள்வதற்காகவும் வாங்கியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...மீண்டும் செந்தில்- கோவை சரளா கிக் கம்போ..வெளியானது புதிய பட அப்டேட்
டிசம்பர் 2021 நயன்தாரா தனது சொந்த தோல் பராமரிப்பு பிராண்டான லிப் பாம் நிறுவனத்தை மருத்துவர் ரெனிதா ராஜனுடன் இணைந்து தொடங்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட வகைகளுடன் இது உலகின் மிகப்பெரிய லிப் பாம் பிராண்ட் என்று கூறப்படுகிறது. இது தவிர நடிகை சாய் வேல் என்ற குயிக் சர்வீஸ் ரெஸ்டாரன்ட் துறையில் சொந்தமான பிராண்டிலும் முதலீடு செய்துள்ளார். மேலும் நயன்தாரா ஒரு புதிய மற்றும் லாபகரமான எண்ணை வணிகத்தில் முதலீடு செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
சொகுசு கார்களை பொறுத்த வரை ரூபாய் 74.50 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ 5 சீரிஸ். ரூ. 88 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் ஜிஎல்எஸ்350 டி, டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா, ஃபோர்டு எண்டெவர் மற்றும் பிஎம்டபிள்யூ 71 சீரிஸ் வைத்துள்ளார் என கூறப்படுகிறது.