கனடாவில் சிறந்த புராண படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிபி சத்யராஜின் மாயோன்...

Published : Sep 16, 2022, 07:28 PM ISTUpdated : Sep 16, 2022, 07:31 PM IST

கனடா 47வது டேரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் தமிழில் தயாரிக்கப்பட்ட மாயோன் திரைப்படம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இடம் பெற்றது.

PREV
14
கனடாவில் சிறந்த புராண படமாக  தேர்ந்தெடுக்கப்பட்ட சிபி சத்யராஜின் மாயோன்...
maayon

தென்னிந்தியாவின் பிரபல நடிகராக இருக்கும் சத்யராஜின் மகனாக இருந்த போதிலும் முன்னணி நடிகராவதற்கான ரேஸில் தற்போது வரை உள்ளார் சிபி சத்யராஜ். இவர் ஸ்டூடண்ட் நம்பர் ஒன் என்னும் தெலுங்கு படத்தின் ரீமேக் மூலம் அறிமுகமாகி இருந்தார். பின்னர் சக்திவேல், கோவை பிரதர்ஸ், நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை, கட்டப்பாவ காணோம், சத்தியா, வால்டர், கபடதாரி, ரங்கா, மாயோன், வட்டம், ரேஞ்சர் தற்போது மாயோன் அத்தியாயம் 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

24
maayon

ஆனால் இதில் எந்த படமும் சிபி சத்யராஜுக்கு மிகப்பெரிய பெயரை பெற்று கொடுக்கவில்லை. இந்நிலையில்கனடாவில் நடைபெறும் டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த புராணங்களுக்கான திரைப்பட விருதை வென்றுள்ளது மாயோன். புராண திரில்லர் திரைப்படமான இது அகழ்வாராய்ச்சியை மையமாக கொண்டு உருவானது.

மேலும் செய்திகளுக்கு...மீண்டும் இயக்குனராகும் சிம்பு...10 கதைகள் ரெடியாம்..அவரே சொன்ன சூப்பர் அப்டேட் இதோ

 

34
maayon

இந்த படத்தில் தான்யா ரவிச்சந்திரன், கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைக்க அருள்மொழி மாணிக்கம் கதை வசனம் எழுதியிருந்தார். டபுள் மீனிங் புரொடக்ஷன் இந்த படத்தை தயாரித்திருந்தது.  படம் வெளியாகி ஐந்து வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் திரையரங்குகளில் ஓடி ரசிகர்களின் ஆதரவை பெற்றது. இந்நிலையில் பல நாடுகள் கலந்து கொள்ளும் கனடா 47வது டேரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் தமிழில் தயாரிக்கப்பட்ட மாயோன் திரைப்படம் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இடம் பெற்றது.

மேலும் செய்திகளுக்கு...தவறாக நடந்துகொண்ட தீவிரவாதியை கொன்றதால்...பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்ளும் கண்ணம்மா!

44
maayon

இந்த திரைப்படத்தை பார்த்த நடுவர்கள் உள்ளிட்ட பார்வையாளர்கள் தொல்பொருள் ஆய்வு கதைக்களத்தை தற்காலத்திற்கு ஏற்ப துல்லியமாக விவரிக்கப்பட்டு இருக்கிறது என படத்தின் திரைக்கதையை வியந்து பாராட்டியதுடன், படம் நிறைவடைந்ததும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி தங்களின் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இதனால் படக்குழு  உற்சாகமடைந்துள்ளனர்.  தற்போது மாயோன் இரண்டாம் பாகத்தில் இரண்டாம் பாகம் உருவாக்கி வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...மீண்டும் செந்தில்- கோவை சரளா கிக் கம்போ..வெளியானது புதிய பட அப்டேட்

click me!

Recommended Stories