நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன், அடுத்த மாதம் அக்டோபர் 2 ஆம் தேதி துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி விஜய் டிவியின் பேமஸ் தொகுப்பாளினி டிடி, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜலட்சுமி, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷ்னி, குக் வித் கோமாளி தர்ஷா குப்தா, ராஜா ராணி அர்ச்சனா, ஷில்பா மஞ்சு நாத், தர்சன், கார்த்திக் குமார் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படும் பிரபலங்களின் பெயர்கள் அடிக்கடி வெளியாகி வருகிறது.
இது ஒருபுறம் இருக்க தற்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை அமலா பாலும் கலந்து கொள்ள உள்ள வாய்ப்புகள் உள்ளதாக ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது. சமீப காலமாக அமலா பாலுக்கு, பட வாய்ப்புகள் குறைந்து வருவதால், ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க இந்த நிகழ்ச்சியை அவர் தேர்வு செய்ய வாய்ப்புகள் அதிகம் என கோடம்பாக்கம் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வந்தாலும், இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.
மேலும் செய்திகள்: நடிகை தேவதர்ஷினியின் மகளா இது..? சேலையில் ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!