உதவி செய்ய ஆளில்லாமல் நடுரோட்டில் தவித்த நபர்.! மீண்டும் மெக்கானிக்காக மாறிய அஜித்.! ரசிகரின் நெகிழ்ச்சி பதிவு

Published : Sep 16, 2022, 07:55 PM IST

நடுரோட்டில் உதவி செய்ய ஆளில்லாமல் தவித்த போது, அஜித் தன்னுடைய பைக்கில் இருந்து இறங்கி வந்து தனக்கு உதவி செய்ததாக ரசிகர் ஒருவர், சமூக வலைதளத்தில் போட்டுள்ள போஸ்ட் தான் தற்போது அஜித் ரசிகர்கள் மத்தியில் தாறுமாறாக லைக்குகள் குவித்து வருகிறது.  

PREV
16
உதவி செய்ய ஆளில்லாமல் நடுரோட்டில் தவித்த நபர்.! மீண்டும் மெக்கானிக்காக மாறிய அஜித்.! ரசிகரின் நெகிழ்ச்சி பதிவு

உலகம் முழுவதையும் பைக்கில் சுற்றி வர வேண்டும் என்கிற கொள்கையோடு, நேரம் கிடைக்கும் போதெல்லாம் பைக் ரைடு செல்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளார் அஜித். தற்போது அஜித் நடித்து வரும் 61 ஆவது படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு, துவங்குவதற்கு முன்பாக, இமயமலை மற்றும்  சுற்றியுள்ள இடங்களில் தான் தற்போது சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

26

அஜித் செல்லும் இடங்களில் எல்லாம், அவர் மீது ரசிகர்கள் அன்பை பொழிந்து வருவதோடு... அவரோடு சேர்ந்து புகைப்படங்களும் எடுத்து கொள்கிறார்கள். இந்த புகைப்படங்கள் தினம்தோறும் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.  ஓரிரு தினங்களுக்கு முன்பு கூட அஜித் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்களுக்கு சென்று வழிபட்ட புகைப்படம் வெளியானது.

மேலும் செய்திகள்: அதற்குள் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் டாப் சீரியல்..! ரசிகர்களை அப்செட் ஆக்கிய தகவல்..!
 

36

இதை தொடர்ந்து தற்போது ரசிகர் ஒருவர், சமூக வலைத்தளத்தில் போட்டுள்ள பதிவு... அஜித் எப்படி பட்ட இளகிய மனம் கொண்டவர் என்பதை எடுத்துக்காட்டியுள்ளது. அஜித்தின் ரசிகர் ஒருவர்... முதல் முறையாக பைக் ரைடு சென்றுள்ளார். அப்போது அவரது பைக் ரிப்பேர் ஆகி நடுரோட்டிலேயே நின்றுவிட்டது. யாரென்றும் உதவி செய்ய மாட்டார்களா என, தவித்த அவர்... ஏதேர்ச்சையாக அஜித்தின் பைக் அவரை கடந்து சென்றபோது கையை காட்டி உதவி கேட்டுள்ளார்.

46

பின்னர் அஜித் தன்னுடைய ஹெல்மெட்டை கூட கழட்டாமல், அந்த ரசிகரிடம் வந்து வண்டியில் என்ன பிரச்சனை என விசாரித்துள்ளார். பின்னர் பின்னால் வந்த காரை நிறுத்தி அதில் இருந்து சில டூல்ஸை வாங்கி, அந்த ரசிகருக்காக மெக்கானிக்காக மாறி உதவி செய்துள்ளார். பின்னர் அந்த ரசிகர் பற்றிய தகவல்களை தெரிந்து கொண்ட பின்னர், தான் அஜித் குமார் என அறிமுகம் செய்து கொண்டுள்ளார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து அந்த ரசிகர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்: Biggboss Tamil 6: பட வாய்ப்பு குறைந்ததால்... பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்குகிறாரா அமலா பால்?
 

56

மேலும் அஜித்தை தங்களுடன் ஒரே ஒரு டீ மட்டும் குடிக்க முடியுமா என அந்த ரசிகர் கோரிக்கை வைக்க, அவரது ஆசைக்காக அஜித் அவர்களுடன் டீ குடித்து மகிழ்ச்சியாக சில நிமிடம் பேசிவிட்டு பின்னர் மீண்டும் தன்னுடைய பைக் ரைடை துவங்கியுள்ளார். இந்த தகவலும், அஜித் ரசிகருடன் எடுத்து கொண்ட புகைப்படமும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

66

அஜித் நடிக்க வருவதற்கு முன் ஒரு மெக்கானிக்காக தன்னுடைய பணியை துவங்கியவர், அந்த பணியை தற்போது மீண்டும் ஒரு ரசிகருக்காக கையில் எடுத்துள்ளது அனைவர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது.

மேலும் செய்திகள்: நடிகை தேவதர்ஷினியின் மகளா இது..? சேலையில் ஹீரோயின்களை மிஞ்சும் அழகில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட்..!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories