மூக்குத்தி அம்மன் 2 படத்துக்காக மகன்களுடன் விரதம் இருக்கும் நயன்தாரா!

Published : Mar 06, 2025, 11:58 AM IST

சுந்தர் சி இயக்க உள்ள மூக்குத்தி அம்மன் 2 படத்திற்காக நடிகை நயன்தாரா விரதம் இருந்து நடிக்க உள்ளதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறி இருக்கிறார்.

PREV
14
மூக்குத்தி அம்மன் 2 படத்துக்காக மகன்களுடன் விரதம் இருக்கும் நயன்தாரா!

Nayanthara Fasting for Mookuthi Amman 2 : நயன்தாரா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தின் பூஜை இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. 

லேடி சூப்பர்ஸ்டார் பட்டத்தை தூக்கியெறிந்த பின்னர் நயன்தாரா நடிக்கும் படம் மூக்குத்தி அம்மன் 2. இப்படத்தை சுந்தர் சி இயக்க உள்ளார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைக்க உள்ளார். இப்படத்தை சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி இருக்கிறது. இப்படத்தின் பூஜைக்கே பிரம்மாண்ட கோவில் செட் அப் போடப்பட்டு இருந்தது.

24
mookuthi amman 2

மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பூஜையில் ஐசரி கணேஷ் பேசுகையில், மூக்குத்தி அம்மன் என்பது தன்னுடைய குலதெய்வத்தின் பெயர் என்றும், அந்த பெயரிலேயே படம் உருவாவதால் அதன் முதல் பாகத்தை தயாரித்ததாகவும், அப்படம் வெளியாகி 4 ஆண்டுகள் ஆனபோதிலும் அதன்பின் எந்த ஒரு அம்மன் படமும் வெளிவரவில்லை. இதனால் நாமே மூக்குத்தி அம்மன் படத்தை ஒரு பிரான்சைஸாக எடுக்கலாம் என முடிவெடுத்து இப்படத்தின் பணிகளை தொடங்கியதாக கூறினார்.

இதையும் படியுங்கள்... பிரம்மாண்டமாக நடந்த நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 பூஜை! படத்தில் இத்தனை பிரபலங்களா?

34
Mookuthi Amman 2 Pooja

மேலும் பிரான்சைஸ் என்றாலே தமிழில் சுந்தர் சி தான் நியாபகத்துக்கு வருவார். அவரின் அரண்மனை பிரான்சைஸ் எவ்வளவு பெரிய வெற்றி என்பது அனைவருக்குமே தெரியும். அதேபோல் மூக்குத்தி அம்மன் 2 படத்தையும் அவரை வைத்து எடுக்க ஆசைப்பட்டேன். அவருக்கு ஓகே சொல்லிவிட்டார். படத்தின் பட்ஜெட் என்னவென்று கேட்டபோது சுந்தர் சி 3 விரல்களை காட்டினார். நானும் ஓகே சொல்லிவிட்டேன். பான் இந்தியா அளவில் இப்படத்தை எடுக்க உள்ளதால் பிரம்மாண்டமாக எடுக்க உள்ளேன்.

44
Nayanthara Fasting for Mookuthi Amman 2

மூக்குத்தி அம்மன் படத்திற்கு பலமே நயன்தாரா தான். முதல் பாகம் எடுத்தபோதே அப்படத்திற்காக விரதம் இருந்து நடித்துக் கொடுத்தார். அதேபோல் அதன் இரண்டாம் பாகம் பூஜை போடும் ஒரு வாரத்திற்கு முன்னரே தன்னுடைய குழந்தைகளுடன் விரதத்தை தொடங்கிவிட்டார் நயன்தாரா என ஐசரி கணேஷ் கூறினார். சுந்தர் சி இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ள முதல் படம் இது என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே எகிற தொடங்கி உள்ளது.

இதையும் படியுங்கள்... மூக்குத்தி அம்மன் 2 : நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் சுந்தர் சி - ஆத்தாடி இத்தனை கோடியா?

Read more Photos on
click me!

Recommended Stories