Nayanthara's Mookuthi Amman 2 Pooja : மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கிய நிலையில், அதில் நடிகை நயன்தாரா உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு ஓடிடியில் ரிலீஸ் ஆன படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் அம்மனாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இப்படம் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக உருவாக்க முடிவெடுத்த ஐசரி கணேஷ், மூக்குத்தி அம்மன் 2வை இயக்குனர் சுந்தர் சி வசம் ஒப்படைத்து உள்ளார்.
24
Nayanthara
மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் தயாராக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதற்காக கோவில் போல பிரம்மாண்ட செட் போட்டு பூஜையை போட்டுள்ளனர். இதில் இயக்குனர் சுந்தர் சி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர். படத்தின் நாயகி நயன்தாரா, லேட்டா வந்தாலும் செம மாஸாக வந்து இந்த பூஜையில் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் சுந்தர் சி பேசுகையில் படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகளை மேடையில் அறிமுகப்படுத்தினார் சுந்தர் சி. அதன்படி நடிகைகள் ரெஜினா கசெண்ட்ரா, இனியா, மைனா நந்தினி, நடிகர்கள் யோகிபாபு, சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிப்பதாக அறிவித்த சுந்தர் சி. இதில் வில்லனாக கன்னட நடிகர் துனியா விஜய் நடிக்க உள்ளதாக அறிவித்தார். முன்னதாக இந்த வில்லன் வேடத்தில் அருண் விஜய் நடிப்பதாக இருந்தது. ஆனால் சம்பள விஷயத்தில் ஒத்து வராததால் அவருக்கு பதில் துனியா விஜய்யை ஒப்பந்தம் செய்துள்ளார்கள்.
44
Nayanthara at Mookuthi Amman Pooja
அடுத்ததாக இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைக்க உள்ளாராம். மூக்குத்தி அம்மன் படத்தின் முதல் பாகத்தில் நடிக்கும்போதே விரதம் இருந்து நடித்த நடிகை நயன்தாரா. இப்படத்திற்கும் அதேபோல் விரதம் இருந்து தான் நடிக்க உள்ளாராம். தற்போது படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஒரு வாரம் முன்னதாக இருந்தே தன் குழந்தைகளுடன் நயன்தாரா விரதத்தை தொடங்கிவிட்டதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறி இருந்தார்.
இப்படத்தின் பூஜையில் படத்துடைய முதல் காட்சியும் படமாக்கப்பட்டது. அதில் நடிகை நயன்தாரா, மூக்குத்தி அம்மனை வணங்கும்படியான காட்சியை படமாக்கினார் இயக்குனர் சுந்தர் சி. இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 15ந் தேதி முதல் தொடங்கப்பட உள்ளதாம். இப்படத்தை ஐசரி கணேஷின் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ், குஷ்பு சுந்தர் சி-யின் அவ்னி சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்கின்றன.