Bison: துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் 'பைசன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் வெளியானது!

Published : Mar 06, 2025, 11:03 AM ISTUpdated : Mar 06, 2025, 11:25 AM IST

துருவ் விக்ரம் நடிப்பில் கபடி விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் பைசன் திரைப்படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.  

PREV
15
Bison: துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் 'பைசன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் வெளியானது!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து, வலுவான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி மிக குறுகிய காலத்தில் முன்னணி இயக்குனராக வளர்ந்து நிற்பவர், இயக்குனர் மாரி செல்வராஜ். இதற்க்கு முன் இவர் இயக்கத்தில் வெளியான, பரியேறும் பெருமாள், மாமன்னன், மற்றும், கர்ணன், மற்றும் வாழை ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
 

25
நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் பைசன் திரைப்படம்

இதை தொடர்ந்து, கபடி விளையாட்டை மையப்படுத்திய படமாக பைசன் (காளைமாடான்) படம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில், ஹீரோவாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்க, இவருக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் ஒன்று ஏற்கனவே துருவ் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு ரிலீஸ் ஆகி, நல்ல வரவேற்பை பெற்றதோடு, படம் மீதான ஆர்வத்தையும் தூண்டியது.

மாரிசெல்வராஜின் அப்பா; அவர் வாழ்க்கையில் நடந்தது என்ன? உருவாகும் புது படம் - ஹீரோ யார் தெரியுமா?
 

35
ஸ்போர்ட்ஸ் டிராமாவாக உருவாகும் காளைமாடான்

ஸ்போர்ட்ஸ் டிராமாவாக உருவாகும் இந்த படம், கபடி வீரர் மனதி கணேசன் கதையை மையப்படுத்தியது என ஏற்கனவே சில தகவல்கள் வெளியான நிலையில், பின்னர் இந்த கதை முழுக்க முழுக்க கற்பனையே தவிர... யாரையும் மையப்படுத்தியது இல்லை என மாரி செல்வராஜ் விளக்கம் கொடுத்திருந்தார். இந்த படத்தில்  ரெஜிஷா விஜயன், லால் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். தற்போது ( Bison Kaalamaadan First Look Release Date Revealed - March 7th Confirmed) இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 'பைசன்' (காளைமாடான்) திரைப்படத்தின் முதல் பார்வை, மார்ச் 7-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக மாரி செல்வராஜ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார் (Mari Selvaraj film first look). 

45
துருவ் விக்ரமின் அடுத்தடுத்த தோல்விகள்

விக்ரமின் மகன், துருவ் தமிழ் சினிமாவில் கடந்த 4 வருடங்களாகவே நிலையான ஹீரோ என்கிற இடத்தை பிடிக்க தொடர்ந்து போராடி வருகிறார். இவர் நடிப்பில் அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக்காக வெளியான வர்மா மற்றும் ஆதித்ய வர்மா ஆகிய 2 பதிப்பும் தோல்வியை தழுவியது. அதே போல்  கடைசியா வந்த படம் 'மகா' படமும் சரியாக போகவில்லை. 

இரண்டு நாயகிகளுடன் துருவ் நடிக்கும் 'பைசன் காளமாடன்' படத்தின் பூஜையில் கலந்து கொண்ட விக்ரம்! போட்டோஸ்!

55
பைசன் படத்தின் முதல் பார்வை நாளை வெளியாகிறது

இதை தொடர்ந்தே தற்போது 'பைசன்' படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ஆஃபிளாஸ் நிறுவனம் மற்றும் நீலம் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த படத்தை எழில் அரசு என்பர் ஒளிப்பதிவு செய்ய, சக்தி திரு என்பவர் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Read more Photos on
click me!

Recommended Stories