Asthram movie release postponed 2025 : அஸ்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றம்

Published : Mar 06, 2025, 09:58 AM IST

ஷியாம் நாயகனாக நடித்த அஸ்திரம் திரைப்படம் மார்ச் 7ந் தேதி ரிலீஸ் ஆக இருந்த நிலையில், தற்போது திடீரென அதன் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு உள்ளது.

PREV
14
Asthram movie release postponed 2025 : அஸ்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றம்

Asthram movie release postponed : ஷாம் ஹீரோவாக நடித்துள்ள அஸ்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு திடீரென தள்ளிவைப்பதாக அறிவித்து உள்ளது.

12பி படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் ஷியாம். அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் லேசா லேசா, உள்ளம் கேட்குமே, எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய இயற்கை போன்ற வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வந்தார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்து அங்கும் நல்ல பெயரையும், புகழையும் பெற்றிருந்தார். கடைசியாக விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்த ஷியாம், தற்போது அஸ்திரம் படம் மூலம் மீண்டும் ஹீரோவாக களமிறங்கி உள்ளார். 

24
Asthram

அஸ்திரம் திரைப்படத்தை புதுமுக இயக்குனர் அரவிந்த் ராஜகோபால் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் ஷியாமுக்கு ஜோடியாக நிரஞ்சனி நடித்துள்ளார். மேலும் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, ரஞ்சித், விதேஷ் ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக கல்யாண் வெங்கட்ராமன் பணியாற்றி உள்ளார். படத்தொகுப்பு பணிகளை பூபதி மேற்கொண்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்... நாயகனாக மீண்டும் மாஸ் என்ட்ரி.. கலக்க வரும் "தளபதியின் அண்ணன்" - வெளியானது "அஸ்திரம்" படத்தின் First Look!

34
Asthram Movie Poster

அஸ்திரம் திரைப்படத்தில் நடிகர் ஷியாம் அகிலன் என்கிற போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பைவ் ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இப்படத்தை கடந்த மாதம் 21ந் தேதியே ரிலீஸ் செய்ய இருந்தனர். ஆனால் தனுஷின் நீக் மற்றும் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படங்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்ததால் பிப்ரவரி 28ந் தேதி அஸ்திரம் படத்தை தள்ளி வைத்தனர். பின்னர் டிராகன் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் 28ந் தேதியும் அஸ்திரம் படம் ரிலீஸ் ஆகாமல் மார்ச் 7ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

44
Asthram Release Postponed

ஆனால் வருகிற மார்ச் 7ந் தேதி ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன் உள்பட அரை டஜன் படங்கள் ரிலீஸ் ஆவதால் அஸ்திரம் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனத்த இதயத்துடன் அறிவிக்கிறோம். மார்ச் 7ந் தேதி அஸ்திரம் திரைப்படம் ரிலீஸ் ஆகாது. புது ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும். அசெளகரியத்துக்கு வருந்துகிறோம். உங்கள் அன்பிற்கு நன்றி” என குறிப்பிட்டு உள்ளனர்.

இதையும் படியுங்கள்... விஜய்யின் இளமைக்கு காரணம் இந்த புட் டயட் தானா..? நடிகர் ஷியாமுக்கு ஷாக் கொடுத்த தளபதி..!

click me!

Recommended Stories