தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகை நயன்தாரா இன்று தன்னுடைய 38வது பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளம் மூலமாக இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நயன்தாரா கடந்த ஏழு வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த போது கூட, தன்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் எந்த ஒரு ஷூட்டிங் பணிகள் இருந்தாலும், அதனை தவிர்த்து விட்டு காதலர் விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டுக்கு சென்று, டேட்டிங் செய்து கொண்டே பிறந்தநாளை கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
நயன்தாரா வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்து, 6 மாதம் கூட ஆகாத நிலையில், குழந்தைகளை அழைத்து கொண்டு வெளிநாட்டுக்கு செல்வது என்பது, மிகவும் கஷ்டம். எனவே இந்த முறை பல ஆண்டுகள் கடைபிடித்து வந்த பழக்கத்தை கைவிட்டு விட்டு, தன்னுடைய குழந்தைகளுக்காக சென்னையிலேயே பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்துள்ளாராம்.