பொங்கல் விருந்தாக விஜய் நடித்துள்ள வாரிசு படமும், அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும் ரிலீஸாகி உள்ளது. இந்தப் படங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் அஜித்தின் துணிவு படத்தை எச்.வினோத்தும், விஜய் நடித்துள்ள வாரிசு படத்தை வம்சியும் இயக்கி உள்ளார். இந்த இரு படங்களும் ஜனவரி 11-ந் தேதி ரிலீஸ் ஆனது.
இரு படங்களையும் ரசிகர்கள் எந்த அளவு கொண்டாடுகிறார்களோ அதே அளவு திரைப்பிரபலங்களும் இந்த படங்களைக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகை நயன்தாரா அஜித் ரசிகர்களுடன் சேர்ந்து துணிவு படத்தை பார்த்து ரசித்துள்ளார். நேற்று இரவு சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் தனது கணவருடன் வந்து அஜித் படத்தை பார்த்து ரசித்துள்ளார் நயன்தாரா.
இதையும் படியுங்கள்... பொங்கல் தொடர் விடுமுறைக்கு தித்திப்பான ஸ்வீட் செய்து சாப்பிடலாம் வாங்க!
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை நயன்தாரா அஜித்துடன் இணைந்து ஏற்கனவே ஏகன், பில்லா, ஆரம்பம், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்துள்ளார். அதேபோல் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் அஜித் தான் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.