இரண்டாம் நாள் வசூலில் தொய்வை சந்தித்த துணிவு... அஜித் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார், மஞ்சு வாரியர் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தின் 2-ம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

Ajithkumar and manju warrier starrer Thunivu movie day 2 box office report

அஜித் நடித்த துணிவு திரைப்படம் ஜனவரி 11-ந் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. எச்.வினோத் இயக்கிய இப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து ஆக்‌ஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டு இருந்தது. இதுதவிர அதில் வங்கிகள் மக்கள் பணத்தை எவ்வாறு சுரண்டுகிறது என்பதையும் வெளிச்சம்போட்டு காட்டி இருந்தனர். இப்படத்தை பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து இருந்தார்.

Ajithkumar and manju warrier starrer Thunivu movie day 2 box office report

துணிவு படத்தில் அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார். இவர்களுடன் பிக்பாஸ் பிரபலங்கள் பாவனி, அமீர், ஜிபி முத்து, சிபி, மமதி சாரி ஆகியோரும் நடிகர்கள் சமுத்திரக்கனி, ஜான் கொகேன், பிரேம், ஜி.எம் சுந்தர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்த இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்து இருந்தார்.

இதையும் படியுங்கள்... விஜய்யை கைவிட்டார்களா பேமிலி ஆடியன்ஸ்..? 2-ம் நாள் வசூலில் கடும் சரிவை சந்தித்த வாரிசு..!


மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படத்துக்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து இருந்தது. இதனால் முதல் நாளில் இப்படம் உலகளவில் ரூ.26 கோடி வசூலை வாரிக் குவித்து இருந்தது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் மட்டும் ரூ.19 கோடி வசூலித்து வாரிசு படத்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்து இருந்தது துணிவு.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் இரண்டாம் நாளில் சற்று தொய்வை சந்தித்துள்ளது. இந்தியாவில் இப்படம் 2-ம் நாளில் ரூ.15 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது. நேற்று வேலை நாள் என்பதால் வசூல் சரிவை சந்தித்துள்ளதாகவும், இனி அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வருவதால் அப்போது துணிவு பட வசூல் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... படம் பார்க்க ஆள் இல்லை... துணிவு படத்தின் ஷோ கேன்சல் - தமிழ்நாட்டில் அஜித் படத்துக்கு இப்படி ஒரு நிலைமையா?

Latest Videos

click me!