ஸ்ருதிஹாசனுக்கு மனநல பிரச்சனை இருப்பதாக பரவிய செய்தி... துணிவுடன் விளக்கம் கொடுத்த கமலின் வாரிசு

Published : Jan 13, 2023, 12:20 PM IST

நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனுக்கு மனநல பிரச்சனைகள் இருப்பதாக செய்திகள் உலா வந்த நிலையில், அதற்கு அவரே விளக்கம் அளித்துள்ளார்.

PREV
14
ஸ்ருதிஹாசனுக்கு மனநல பிரச்சனை இருப்பதாக பரவிய செய்தி... துணிவுடன் விளக்கம் கொடுத்த கமலின் வாரிசு

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவரது மூத்த மகள் ஸ்ருதிஹாசன் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தமிழில் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவருக்கு, தற்போது தமிழில் பட வாய்ப்பு இல்லாததால், தெலுங்கு, இந்தி போன்ற பிற மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

24

குறிப்பாக தெலுங்கில் செம்ம பிசியாக நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். தற்போது சங்கராந்தி ஸ்பெஷலாக தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்துள்ள வீரசிம்ஹா ரெட்டி திரைப்படமும், சிரஞ்சீவி நடித்துள்ள வால்டர் வீரய்யா படமும் ரிலீஸ் ஆகி உள்ளது. இந்த இரண்டு படங்களிலுமே ஸ்ருதிஹாசன் தான் ஹீரோயினாக நடித்துள்ளார். இதுதவிர பிரபாஸின் சலார் படத்திலும் நடித்து வருகிறார் ஸ்ருதி.

இதையும் படியுங்கள்...Mattu Pongal Rangoli Designs: மாட்டு பொங்கலில் வாசல் அழகாக இந்த கோலத்தை போடுங்க!

34

கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த வால்டர் வீரய்யா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதி ஹாசன் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு மனநல பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாகத் தான் அவர் அந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என கூறப்பட்டது. இதுதொடர்பாக தெலுங்கு ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

44

இந்நிலையில், தனது உடல்நலம் குறித்து பரவிய தகவலை அறிந்து ஷாக் ஆன ஸ்ருதிஹாசன், அதற்கு துணிவுடன் பதிலடி கொடுத்துள்ளார். அதன்படி தனக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாகத்தான் தன்னால் வால்டர் வீரய்யா படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியவில்லை எனக்கூறிய ஸ்ருதிஹாசன், தன்னைப்பற்றி தவறாக பரப்பப்பட்ட செய்திகளின் ஸ்கிரீன் ஷாட்டையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து நல்ல முயற்சி என Thug Life ஆக பதில் அளித்துள்ளர்.

இதையும் படியுங்கள்... Pongal 2023: பொங்கலில் சூரிய பகவானை ஏன் வழிபடுகிறார்கள்? என்னென்ன நன்மைகள் தெரியுமா?

click me!

Recommended Stories