கோலிவுட்டில் காதல் ஜோடிகளாக வலம் வரும் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் வருகிற ஜூன் 9-ந் தேதி திருமணம் செய்துகொள்ள உள்ளனர். இவர்களின் திருமணம் முதலில் திருப்பதியில் நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது.
24
இவர்களது திருமணத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவர்களது திருமணத்திற்கு திரைப்பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இதில் அவர்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ள உள்ளார்களாம். இதுதவிர தமிழ் திரையுலகைச் சேர்ந்த 3 முக்கிய பிரபலங்களுக்கு மட்டும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
34
அதன்படி விக்னேஷ் சிவனின் பேவரைட் ஹீரோவும், நண்பருமான விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். இதுதவிர நயன்தாராவின் நெருங்கிய தோழியும், நடிகையுமான சமந்தாவும் இவர்களது திருமணத்தில் கலந்துகொள்ள உள்ளாராம். மற்றொருவர் டாக்டர் மற்றும் பீஸ்ட் படத்தின் இயக்குனரான நெல்சன் தான்.
44
இவர்களைத் தவிர வேறு எந்த பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லையாம். இதில் விக்னேஷ் சிவன் அவரது நெருங்கிய நண்பரான அனிருத்திற்கு அழைப்பு விடுக்காதது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. திருமணத்திற்கு பின்னர் சென்னையில் பிரம்மாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ள இந்த ஜோடி, அதற்கு திரையுலக பிரபலங்களை அழைக்க திட்டமிட்டுள்ளார்களாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.