நடிகை நயன்தாரா இந்த ஆண்டு தனது நீண்ட நாள் காதலனை திருமணம் செய்துகொண்டார். பொதுவாகவே திருமணத்துக்கு பின்னர் நடிகைகளுக்கு பட வாய்ப்புகள் அதிகளவில் கிடைக்காது. ஆனால் நயன்தாரா அப்படியல்ல. திருமணமான பின்னர் தான் அவர் அதிகளவிலான படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன.
24
அதன்படி பாலிவுட்டில் அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா. இதுதவிர மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ஒரு படம், தமிழில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் என செம்ம பிசியாக நடித்து வரும் நயன்தாரா தற்போது மேலும் ஒருபடத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளாராம்.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், விரைவில் பட தயாரிப்பிலும் இறங்க உள்ளார். அவர் தயாரிப்பில் உருவாக உள்ள முதல் படத்தை மேயாத மான், ஆடை, குளுகுளு போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் தான் இயக்க உள்ளாராம். இப்படத்தில் தான் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடிக்க உள்ளாராம்.
44
இப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க உள்ளார். இப்படம் மூலம் நயன்தாராவும், ராகவா லாரன்ஸும் முதன்முறையாக இணைந்து பணியாற்ற உள்ளனர். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.