நாயகி சீரியல் வித்யா பிரதீபுக்கு திருமணம் ஆகிடுச்சா? மாலையும் கழுத்துமா... தாலியோடு ஷாக் கொடுக்குறாங்களே!

First Published | Nov 25, 2021, 5:20 PM IST

சன் டி.வி.யில் ஒளிபரப்பான “நாயகி” சீரியல் மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமான வித்யா பிரதீப் திடீர் என கழுத்தில் தாலியோடு வெளியிட்டுள்ள புகைப்படம், அவரது ரசிகர்களை செம்ம ஷாக் ஆக்கியுள்ளது .

சின்னத்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் ஒருபோதும் வெள்ளித்திரையில் மிளிர முடியாது என்பதை ஒரு சிலர் மாற்றி காண்பித்துள்ளனர். சிவகார்த்திகேயன், சந்தானம், ப்ரியா பவானி ஷங்கர், வாணி போஜன் என ஏராளமான சின்னத்திரை பிரபலங்கள் சினிமாவில் வெற்றி கொடி நாட்டியுள்ளனர். 

கேரளாவைச் சேர்ந்த வித்யா பிரதீப் பயோ டெக்னாலஜி படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர். மருத்துவ துறையில் நல்ல அங்கீகாரத்தை பெற்றுள்ள வித்யா, ஆரம்பத்தில் இருந்தே மாடலிங் துறையிலும் சாதித்து வருகிறார். 

Tap to resize

அதன் பின்னர் சினிமாவில் நடிக்க தொடங்கிய வித்யா, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான "சைவம்" படத்தில் பேபி சாராவின் அம்மாவாக நடித்தார். 

அதன் பின்னர் பல படங்களில் நடித்திருந்தாலும் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்த தடம் படத்திலும் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார். 

சன் டி.வி.யில் தைரியமான பெண்ணாகவும், கணவருடன் சேர்ந்து போராடும் மனைவியாகவும் இவர் நடித்த நாயகி சீரியலில் நடித்து பட்டி தொட்டி எங்கும் இவரை பிரபலமடைய செய்தது.  

சீரியலில் எந்த அளவிற்கு கவனம் செலுத்தி வந்தாரோ... அதே அளவிற்கு திரைப்படங்களில் நடிப்பதிலும் அதீத கவனம் செலுத்தி வந்தார்.

இந்த சீரியலில் இவர் கதாபாத்திரம் நிறைவடைந்த பின்னர்... முழு நேர வெள்ளி திரை நாயகியாக மாறிவிட்டார். முன்னணி ஹீரோக்களுக்கு கூட ஜோடியாக நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகியது.

சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், தற்போது மாலையும் கழுத்துமாக, தாலியோடு வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஆனால் இது போட்டோ ஷூட்டுக்காக எடுக்கப்பட்டது என்பதும் தெரிகிறது.

Latest Videos

click me!