#BiggBossTamil5: அச்சச்சோ.. இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் கலந்து கொள்ள வாய்ப்பே இல்லையா?பகீர் காரணம்!

First Published | Nov 25, 2021, 1:56 PM IST

கொரோனா தொற்றால் (Corona Infection) தற்போது பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கமல் இந்த வாரம் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் (Biggboss Show) கலந்து கொள்ள வாய்ப்பே இல்லை என்று அடித்து கூறி வருகிறது ஒரு தரப்பு. இதற்கான சில காரணங்களும் முன் வைக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் துவங்க பட்ட நாள் முதல், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நடிகர் கமல் ஹாசன் இந்த வாரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றே கூறப்படுகிறது.

சுமார் நான்கு வருடங்களாக, பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியம் குறையாமல்... தொகுத்து வழங்கி வரும் கமல் ஹாசன், எவ்வளவு முக்கிய வேலைகள் இருந்தாலும் அதனை தவிர்த்து விட்டு சனி - ஞாயிறு இரண்டு நாட்கள் மக்கள் முன் ஆஜர் ஆகி விடுவார்.

Tap to resize

மேலும் மக்கள் போட்டியாளர்களிடம் கேட்க விரும்பும் கேள்விகளை மக்களின் சார்பாக, மிகவும் சாமர்த்தியமாக கேட்டு, சாதுர்யமாக தவறு செய்பவர்களுக்கு சாட்டையடி கொடுத்து கெத்து காட்டுவார்.

அதே நேரம் எந்த இடத்தில் போட்டியாளரை விட்டுக்கொடுக்க கொடுக்க வேண்டும், இழுத்து பிடிக்க வேண்டும் என்பதையும் நன்கு தெரிந்தவர் கமல் ஹாசன்.

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றால், தொகுப்பாளர் கமலை தவிர வேறு யாரையும் அவ்வளவு எளிதில் பிக்பாஸ் ரசிகர்கள் யூகிக்க கூட முடியாத அளவிற்கு தன்னுடைய தடத்தை ஆழப்பதித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கொரோனா காரணமாக மருத்துவமனையில் கமல் ஹாசன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், அவருக்கு பதில் இந்த நிகழ்ச்சியை, அவரது மகள் சுருதிஹாசன் தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியானது.

இதை தொடர்ந்து, மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த... நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கவும் வாய்ப்புகள் உள்ளதாக அரசால் புரசலாக தகவல் வெளியானது.

அடுத்தடுத்து பல தகவல்கள் வெளியானது போதும், நேற்று ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கமல் நல்ல உடல்நலத்தோடு இருப்பதாக கூறப்பட்டதால், அவரே இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என சில தகவல்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

ஆனால் அதற்க்கு வாய்ப்பே இல்லை என அடித்து கூறி வருகிறது ஒரு தரப்பு. இதற்க்கு மெடிக்கல் ரீதியான காரணங்கள் தான் முன்வைக்க படுகிறது.

அதாவது ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர் உடலில் சுமார் 14 நாட்கள் அந்த கிருமி உயிரோடு இருக்கும் எனவே இரண்டு வாரங்கள் கொரோனா பாதிக்கப்பட்ட நபர் தனிமையில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில், கமல் இந்த வாரம் எப்படி கொரோனா தொற்றுடன் வந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியும் என்றும், ஒருவேளை அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் கூட அதன் மூலம், அங்கிருக்கும் கேமரா மேன்கள், பிக்பாஸ் குழுவினர் மற்றும் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டு வெளியே செல்லும் நபர் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது என பகீர் காரணம் கூறப்பட்டு வருகிறது.

கமல் நடிகர் என்பதை தாண்டி ஒரு கட்சியின் தலைவர்... எனவே அவரை விட அவர் சார்ந்த மனிதர்கள் மீது எப்போதுமே அளவுகடந்த அக்கறை உள்ளவர். எனவே இந்த வாரம் அவர் நிகழ்ச்சியில் தோன்ற வாய்ப்பே இல்லை எனலாம்.

எனவே இம்முறை புதிதாக தொகுப்பாளர் யாராவது வருவார்களா? அல்லது இந்த வாரம் பிக்பாஸ் ஏதேனும் ட்விட் வைக்குமா? என்பது இன்னும் இரு தினங்களில் தெரியவரும் அது வரை கார்த்திருப்போம்.

Latest Videos

click me!