Samantha: விவாகரத்துக்கு பின்னர் சமந்தா வீட்டில் நடந்த கொண்ட்டாட்டம்..! வாழ்த்துக்களுடன் வைரலாகும் புகைப்படம்!

First Published | Nov 25, 2021, 1:00 PM IST

கணவர் நாக சைதன்யாவை (Naga Chaitanya) விவாகரத்து செய்த பின்னர், சமந்தா (Samantha) தன்னுடைய வீட்டில் நடந்த கொண்டாட்டம் குறித்த புகைப்படம் தற்போது தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

திருமணத்திற்குப் பின்பு திரையுலகை விட்டு விலகிவிடும் நடிகைகளுக்கு மத்தியில், திருமணத்திற்குப் பின்பும் தமிழ், தெலுங்கு, என இரண்டு திரையுலகிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பட்டையை கிளப்பி வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான திரைப்படங்கள் இவரது மார்க்கெட்டை சரிய  விடாமல் கூட்டியது.

மேலும் இவர் இந்தியில் நடித்த 'தி ஃபேமிலி மேன் 2' வெப் சீரிஸ் தமிழ் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், ஹிந்தியில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று, வேற லெவலுக்கு இவருடைய நடிப்பு ரசிகர்களால் ரசிகர்களாலும், பிரபலங்களாலும் ரசிக்க பட்டு, இவரை அடுத்த தளத்திற்குக் கொண்டு சென்றது.

Tap to resize

தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நடிகை சமந்தா, சில காலம் திரை உலகை விட்டு விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்த இருந்த நிலையில் திடீரென இவருக்கும், இவருடைய காதல் கணவரான பிரபல நடிகர் நாக சைதன்யாவிற்கும், திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்று விட்டனர்.

ஏற்கனவே இது குறித்த வதந்திகள் வரும் போது அதனை கண்டுகொள்ளாமல் இருந்த இருவரும், பின்னர் கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக தங்களுடைய பிரிவை அறிவித்தனர். இந்த தகவல் தமிழ் தெலுங்கு திரையுலக ரசிகர்கள் மத்தியில் தற்போது வரை பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சமந்தா - நாக சைதன்யா விவாகரத்திற்கு பல காரணங்கள், வதந்திகள், வெளியானதால் மன உளைச்சலுக்கு ஆளான சமந்தா...  வதந்திகளுக்கு பதிலடி கொடுத்தது மட்டுமின்றி, கணவரின் பிரிவினால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து வெளியேறும் விதமாக, தற்போது ஆன்மீக சுற்றுலா...  நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவது..  தன்னுடைய செல்லப் பிராணிகளுடன் பழகுவது...  திரைப்பட வாய்ப்புகள் ... என தன்னைத் தானே மிகவும் பிஸியாக இயக்கிக் கொண்டு வருகிறார்.

மேலும் பிரபல நடிகை டாப்சி தயாரிப்பில் உருவாக உள்ள பாலிவுட் திரைப்படத்தில் சமந்தா பாலிவுட் திரையுலகில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகவும், இந்த படத்தை இயக்குனர் காந்தரூபன் ஞானசேகரன் என்பவர் இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.  அதே போல் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'சகுந்தலம்' மற்றும் 'காத்துவாக்குல 2 காதல்' ஆகிய படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், விரைவில் ரிலீசாக உள்ளன.

இந்நிலையில் தற்போது கணவரை விவாகரத்து செய்த பிறகு முதல் முறையாக தன்னுடைய செல்ல நாய் குட்டியான ஹாஷ் பிறந்தநாளை சமந்தா கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படத்தை அவர் வெளியிட, பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Latest Videos

click me!