பொதுவாகவே சிம்புவின் படங்கள் என்றால், பிரச்சனைகளை சந்திக்காமல் வெளியாவது தான் அதிசயமாக பார்க்கப்படுகிறது. இதுபோல் ஏற்கனவே வெளியான படங்கள் கூட சில பிரச்சனைகளை சந்தித்த பின்னரே வெளியாகியுள்ளது.
அதற்க்கு தற்போது வெளியாகியுள்ள 'மாநாடு' திரைப்படமும் விதிவிலக்கு இல்லை என்பதை, ஏற்கனவே ஒருமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு... பின்னர் 'அண்ணாத்த' ரிலீஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இன்றைய தினம், 'மாநாடு' உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து படத்தின் புரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடந்து வந்தது. சமீபத்தில் ட்ரைலர் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் சிம்பு தன்னுடைய பிரச்சனைகளை கூறி கண் கலங்கியது பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
இதை தொடர்ந்து, திடீர் என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மனவலியோடு படம் ரிலீஸ் ஆக இருந்த சில மணி நேரத்தில், ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்தார். இது ஒட்டு மொத்த சிம்பு ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்தது.
இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில மணி நேரத்தில் மீண்டும், பட பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கப்பட்டு நாளை படம் ரிலீஸ் அறிவிப்பும்வெளியானது .
இந்நிலையில் இந்த பட பிரச்சனை தீர யார் காரணம் என்பது, சிம்புவின் நண்பர் மற்றும் நடிகருமான மகத் ராகவேந்திரா பதிவு மூலம் தெரியவந்துள்ளது.
சிம்புவுக்கு எந்த பிரச்சனை வந்தாலும், முதலில் கவசமாக இருந்து காப்பாற்றும்... சிம்புவின் பெற்றோரான உஷா டி.ராஜேந்தர் மற்றும் டி.ராஜேந்தர் தான் கடைசி நேரத்தில் படம் ரிலீஸ் பிரச்சனையில் தலையிட்டு சுமூகமாக தீர்த்து வைத்துள்ளனர்.