தமிழ், தெலுங்கு, இந்தி என சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்த தமன்னா. தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பிடிப்பதில் படு பிசியாக உள்ளார். எனவே விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு பட வாய்ப்புக்கான வேட்டையில் கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழில் அஜித், விஜய் உட்பட முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்ட இவர், தெலுங்கிலும் பவன் கல்யாண், மகேஷ்பாபு, அல்லு அர்ஜுன், நாகசைதன்யா, ஜூனியர் என்.டி.ஆர், பிரபாஸ் எனப் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டார்.
நயன்தாரா - த்ரிஷாவை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, திரையுலகில் நீண்டகாலமாக முன்னணி நாயகியாக நடித்து வரும் இவரை, உலக அளவில் பிரபலமடைய வைத்தது என்றால் அது, இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி' திரைப்படம் தான்.
ஹோம்லி, கிளாமர் என இரண்டையும் கலந்து கட்டி என்ன தான் நவரசத்தையும் வெளிப்படுத்தினாலும் தமன்னாவிற்கு தற்போது சரிவர பட வாய்ப்புகள் அமையவில்லை.
சமீபத்தில் தெலுங்கில் ஒளிபரப்பான மாஸ்டர் செப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த தமன்னா, நிகழ்ச்சியாளர்களுடன் ஏற்பட்ட திடீர் கருத்து வேறுபாடு காரணமாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
தற்போது அம்மணியின் கை வசம் தமிழில் ஒரு படம் கூட இல்லை என்றாலும், அடுத்தடுத்து ஹிந்தி - தெலுங்கு போன்ற சில படங்கள் உள்ளது.
சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் தமன்னா, தற்போது மிகவும் வித்தியாசமாக கருப்பு நிற உடையில் அம்மன் போல் காட்சியளித்தபடி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த புகைப்படத்தில் தலை வாழை இலையில்... தென்னிந்திய டிபன் உணவுகளான இட்லி, தோசை, பொங்கல், வடை என அனைத்தையும் வைத்து ஒரு கட்டு காட்டுகிறார். மேலும் வாழை இலையில் சாப்பிடுவது நல்ல ஒரு உணர்வை தருவதாகவும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.