Biggboss Arav: பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவுக்கு குழந்தை பிறந்தாச்சு ! செம்ம உச்சாகத்தில் குடும்பத்தினர்..!

Published : Nov 24, 2021, 12:49 PM ISTUpdated : Nov 24, 2021, 01:13 PM IST

பிக்பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆரவிற்கும் (Biggboss Title Winner) நடிகை ராஹி-க்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்து முடிந்த நிலையில், தற்போது குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை ஆரவ் தெரிவிக்க அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகிறது.  

PREV
17
Biggboss Arav: பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரவுக்கு குழந்தை பிறந்தாச்சு ! செம்ம உச்சாகத்தில் குடும்பத்தினர்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் டிஆர்பி-க்கு முக்கியமாக உதவிய சமாச்சாரம் என்றால் அது ஆரவ் - ஓவியா காதல் விவகாரம் தான். ஓவியா ஆரவை காதலியதாக சுற்றி சுற்றி வந்தாலும், முதலில் காதலிப்பது போல் நடந்து கொண்டு, பின்னர் தன்னுடைய காதலில் இருந்து பின் வாங்கினார் ஆரவ்.

 

27

அதிலும் இவரது மருத்துவ முத்தம், தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில சர்ச்சைகளை சந்தித்தாலும், பின்னர் ஒருவழியாக பிக்பாஸ் டைட்டில் வின்னர் என்கிற படத்திற்கும் இவர் தான் சொந்தக்காரராக மாறினார்.

 

37

மாடலிங் துறையில் கலக்கி வந்த ஆரவ், பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னர், தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட் ஆனார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான  ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்’ படம் இவர் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை.

 

47

தற்போது இவர் நடித்து முடித்துள்ள 'ராஜ பீமா' படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 'மீண்டும் வா அருகில் வா' என்கிற படத்திலும் நடித்து வருகிறார்.

 

57

தரமான படங்களில் மட்டுமே நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் ஆரவ் - ராஹி  என்ற நடிகையை கடந்த ஆண்டு (செப்டம்பர் 6ம் தேதி ) திருமணம் செய்து கொண்டார். மிகவும் பிரமாண்டமாக நடந்த இவர்களது திருமணத்தில்,பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய காயத்ரி ரகுராம், ஆர்த்தி, சினேகன், சுஜா வருணி  உள்ளிட்ட பலர் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

 

67

மேலும் ஆரவின் மனைவி ராஹி கர்ப்பமாக இருந்த தகவலையும் சமீபத்தில் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரியப்படுத்தி இருந்தார். இந்த தம்பதிக்கு தற்போது அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது.

 

77

இந்த தகவலை மிகவும் சந்தோஷத்துடன் தெரிவித்துள்ள ஆரவ் தாய் - சேய் இருவரும் நலமுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் ஆரவின் ஒட்டு மொத்த குடும்பத்தினரும் மிகவும் சந்தோஷமாக உள்ளனர். ரசிகர்கள் பலரும் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிபிடித்தக்கது.

 

click me!

Recommended Stories