பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ஆம் தேதி அமோகமாக துவங்கியது. கடந்த நான்கு சீசனை விட, போட்டியாளர்கள் தேர்வு இந்த முறை வித்தியாசமாகவே இருந்தது. அதே போல் எப்போதும் 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்ளும் நிலையில் இந்த முறை 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்றனர்.
முதல் வாரத்தில் எந்த எலிமினேஷனும் இல்லை என்றாலும், தவிர்க்க முடியாத காரணத்தால் திருநங்கை போட்டியாளரான நமீதா மாரிமுத்து வெளியேறினார் என பிக்பாஸ் அறிவித்தார்.
இவர் வெளியேறியதற்கான காரணம், தாமரை தான் என கூறப்பட்ட நிலையில், சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் பேசிய நமீதா, அவருக்கும் தான் வெளியேறியதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.
பின்னர், இரண்டாவது வாரத்தில் நாடியா சங்கும், 3 ஆவது வாரத்தில் அபிஷேக் ராஜாவும், 4 ஆவது வாரத்தில் சின்ன பொண்ணு , பிரபல மாடல் அழகி சுருதி, மற்றும் கடந்த வாரம் இசை வாணி என இதுவரை 6 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.
அதே போல் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து 2 ஆவது வாரத்திலேயே எலிமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட அபிஷேக் ராஜா கடந்த வாரம் மீண்டும் வயல் கார்டு போட்டியாளராக உள்ளே வந்தார்.
இந்நிலையில் இந்த வாரம் புதிய வயல் கார்டு போட்டியாளர் உள்ளே நுழைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. தற்போது இதுகுறித்த புரோமோ ஒன்றை வெளியிட இந்த தகவல் உறுதியாகியுள்ளது.
யார் இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்கிறார் என்பதை நிகழ்ச்சியாளர்கள் ரிவீல் செய்யவில்லை என்றாலும், இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வருவது, பிரபல நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பரும், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடிகராகவும், தொகுப்பாளராகவும் கலக்கிய சஞ்சய் என்பது சில உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனவே இன்றைய நிகழ்ச்சி எதிர்பார்த்ததை விட விறுவிறுப்பாக இருக்கும் என கூறப்படுகிறது. சஞ்சய் உள்ளே வருவதால் பிக்பாஸ் வீட்டில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.