தனுஷ் மற்றும் அக்‌ஷயா குறித்து அவதூறு - நெப்போலியன் சார்பில் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!

Published : Apr 21, 2025, 04:29 PM IST

தனது மகன் தனுஷ் மற்றும் மருமகள் அக்‌ஷயா குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அவதூறு குறித்து நடிகர் நெப்போலியன் சார்பில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  

PREV
16
தனுஷ் மற்றும் அக்‌ஷயா குறித்து அவதூறு - நெப்போலியன் சார்பில் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்!

நடிகர் நெப்போலியன்:

எட்டுப்பட்டு ராசா, எஜமான், சீவலப்பேரி பாண்டி ஆகிய படங்கள் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் நெப்பொலியன். ஹீரோவாக, வில்லனாக, குணச்சித்திர கதாபாத்திரங்களில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக எஜமான் படத்தில் ரஜினிகாந்திற்கு வில்லனாக இவர் நடித்ததற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. 
 

26
Politician Napoleon

அரசியலிலும் கால் பதித்த நெப்போலியன்:

1991 ஆம் ஆண்டு திரைக்கு வந்த புது நெல்லு புது நாத்து படத்தில் துவங்கி... ஹாலிவுட் படங்கள் வரை  கிட்டத்தட்ட 200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். ஒரு சில படங்களுக்கு பின்னணி பாடலும் பாடியுள்ளார். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போதே திமுகவில் இணைந்து, வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். 

நெப்போலியன் மகன் தனுஷுக்கு மனைவி அக்‌ஷயா கொடுத்த விலைமதிப்பில்லா பரிசு! என்ன தெரியுமா?
 

36
Napoleon son Dhanoosh

நெப்போலியனின் மகன் தனுஷ்:

இதே போன்று பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்பியாகவும் மாறினார். சினிமாவிலிருந்து விலகியிருந்த நெப்போலியன் பின்னர் அரசியலிலிருந்தும் விலகி தனது குடும்பத்திற்காக அமெரிக்காவில் செட்டிலானார். நெப்போலியனின் மகன் தனுஷ் சிறுவயது முதலே தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரால் நடக்க முடியாமல் போனது. தற்போது வரை நெப்போலியன் தனது மகன் தனுஷை கண்ணும் கருத்துமாக கவனித்து கொண்டு வருகிறார். 
 

46
Napoleon son Dhanoosh Marriage

மூத்த மகன் தனுஷுக்கு ஜப்பானில் நடந்த திருமணம்:

கடந்த ஆண்டு தன்னுடைய மூத்த மகன் தனுஷுக்கு ஜப்பானில் வைத்து பிரமாண்டமாக திருமணமும் செய்து வைத்தார். என்னதான் அமெரிக்காவில் செட்டிலாகியிருந்தாலும் மகனுக்கு தமிழ் கலாச்சார பெண்ணை தான் திருணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த நெப்போலியன் உறவினர் பெண்ணாற அக்ஷயா என்பதை தான் திருமணம் செய்து வைத்துள்ளார்.

அடேங்கப்பா... நெப்போலியன் தன்னுடைய மகன் தனுஷ் திருமணத்திற்கு எத்தனை கோடி செலவு செய்துள்ளார் தெரியுமா?
 

56
Dhanoosh Health Rumors:

தனுஷ் உடல்நிலை குறித்து பரவிய வதந்தி:

இந்த நிலையில் தான் தற்போது தனுஷ் உடல் நிலை பற்றியும், அவரது மனைவி அக்‌ஷயா பற்றியும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறு பரப்பப்பட்டு வருவதாகவும்,  தனுஷிற்கு சிகிச்சை அளித்து வரும் இயன்முறை மருத்துவர் டேனியல் ராஜா, நெப்போலியன் சார்பில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

66
Police Complaint:

நெல்லை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்:

அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தனுஷின் உடல்நிலை குறித்தும், அவரது மனைவி அக்‌ஷயா குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. அப்படி அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories