
நடிகரின் வாக்குமூலம்:
மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ போதைப்பொருள் வழக்கில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். மேலும் இவருடைய வழக்கு தொடர்பான தகவல்கள் மற்றும் நடிகரின் வாக்குமூலம் போன்றவற்றின் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
போதைப்பொருட்களைப் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளார்:
அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, நடிகர் ஷைன் டாம் சாக்கோ மெத்தம்பேட்டமைன் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களைப் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், சில நேரங்களில் படப்பிடிப்பு தளங்களுக்கு, சில முகவர்கள் மூலம் போதைப்பொருள் விநியோகம் செய்ததாகவும் கூறியுள்ளார்.
போதைப்பொருள் விவகாரம்: போலீசார் விசாரணையில் அந்தர் பல்டி அடித்த ஷைன் டாம் சாக்கோ !
மலையாளி பெண்ணை சந்திக்க ஹோட்டலுக்கு சென்றேன்:
ஷைனின் வாக்குமூலத்தின்படி, வெளிநாட்டில் வசிக்கும் ஒரு மலையாளி பெண்ணை சந்திக்க அவர் சமீபத்தில் வேதாந்தா ஹோட்டலுக்குச் சென்றதாகவும், அந்தப் பெண்ணுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்ததாகவும், தனது சொந்தப் பணத்தில் அறையை முன்பதிவு செய்ததாகவும், அந்தப் பெண் தனி அறையை முன்பதிவு செய்ததாகவும் அவர் கூறினார். இந்த சந்திப்பு நேரில் நடந்த முதல் சந்திப்பு என்று கூறப்படுகிறது.
படப்பிடிப்புக்கு கொண்டு வந்தால் மட்டுமே புகைப்பேன்:
அதே போல் போதைப்பொருள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட அவர், அதற்கான பணத்தை கூகிள் பே மூலம் செலுத்தியதாகவும், ஆனால் விற்பனையாளர்களின் அடையாளங்கள் அல்லது பரிவர்த்தனைகளின் சரியான தேதிகள் தனக்கு நினைவில் இல்லை என்று கூறியுள்ளார். போதைப்பொருள் பழக்கம் குறித்து, மெத்தம்பேட்டமைனை முகர்ந்து பார்த்ததாகவும், எப்போதாவது கஞ்சா புகைப்பதாகவும், குறிப்பாக யாராவது படப்பிடிப்பு தளத்திற்கு கொண்டு வந்தால் புகைப்பதாகவும் ஒப்புக்கொண்டார்.
நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது: போதைப்பொருள் வழக்கு விசாரணையின் முழு விவரம்!
ஹோட்டல் அறையிலிருந்து வெளியேறிய ஏன்?
ஹோட்டல் அறையிலிருந்து திடீரென வெளியேறிய ஏன் என கேட்டதற்கு, "தனது தந்தை சம்பந்தப்பட்ட நிதி தகராறில் தொடர்புடையவர்கள் தன்னைத் தாக்க வருவதாக நினைத்தே அங்கிருந்து பயந்து ஓடியதாக ஷைன் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது தனது தந்தை ஒரு படத்தை தயாரித்ததாகவும், அந்த படத்தின் லாபத்தை பகிர்ந்து கொள்வதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நடிகை வின்சி அலோஷியஸ் குற்றச்சாட்டு:
நடிகை வின்சி அலோஷியஸ் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பியபோது, நகைச்சுவையான தொனியில் சில கருத்துகளை மட்டுமே அவர் கூறியுள்ளாராம். மேலும் அவரிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என்றும் ஷைன் போலீசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு தளங்களில் உள் குழுக்கள் இருப்பது தனக்குத் தெரியும் என்றும், ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்களை சந்தித்ததில்லை என்றும் அவர் கூறினார். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.