நடிகர் சரத்பாபு கடந்த இரண்டு மாதங்களாகவே, உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்... நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், இவருடைய இழப்பு குறித்து சரத்பாபுவின் இரண்டாவது மனைவியின் மகன் தீபக் கூறியுள்ள உள்ள தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
எனினும் இவரால் தமிழ் சினிமாவில் நிலையான கதாநாயகனாக ஜொலிக்க முடியவில்லை. சரத் பாபு, பிரபல நடிகை ரமா பிரபாவை காதலித்த நிலையில், இருவரும் திருமணம் செய்யாமலேயே 14 வருடங்கள் லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்தனர். பின்னர் ஒரு சில காரணங்களால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அப்போது ரமா பிரபா, சரத் பாபு தன்னுடைய சொத்துக்களை பறித்து கொண்டார் என புகார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து சில வருடங்கள் கழித்து, பிரபல நடிகர் நம்பியாரின் மகள் சினேகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே சினேகா கேரளாவை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவருக்கு தீபக் என்கிற மகன் ஒருவரும் இருந்தார். பிறகு கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று, தனியாக வாழ்ந்து வந்தார். இதன் பின்னர் நம்பியார் மகள் சினேகாவுக்கும், சரத் பாபுவுக்கும் திருமணம் நடந்தது. இருவரும் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒன்றாக வாழ்ந்த நிலையில், பின்னர் ஒரு சில மனஸ்தாபங்களால் பிரியும் சூழல் ஏற்பட்டது.
பைக் ரேஸ் இடையில்... சமையல் கலையையும் அவிழ்த்து விட்ட அஜித்! வைரலாகும் புகைப்படம்!
இரண்டாவது திருமணமும் விவாகரத்தில் முடிந்த நிலையில், சரத் பாபு தனிமையில் வாழ்ந்து வந்தார். தற்போது சினேகாவின் மகன் தீபக், மறைந்த நடிகர் சரத்பாபு குறித்து உருக்கமாக பேசியுள்ள தகவல், சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது. இது குறித்த இவர் கூறுகையில், "திருமணத்திற்கு முன்பு சரத் பாபு சார், தன்னுடைய அம்மா சினேகாவுக்கு... திருமணத்திற்கு தேவையான நகைகள் மற்றும் புடவை போன்ற அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்வதற்காக மிகப் பெரிய தொகையை கொடுத்தார்.
திருமணத்திற்கு பின்னர் அவர் என்னிடம் சொன்ன முதல் வார்த்தை என்னை அப்பா என்று கூப்பிடு என்று தான். அது மட்டும் இல்லாமல் என்னை எப்போதுமே அவர் சொந்த மகன் போல தான் பார்த்தார். என்னுடைய திருமணத்தின் போது பல பிரச்சனைகள் வந்தது. அந்த நேரத்தில் என்னுடைய அம்மாவும், சரத்பாபு சாரும் பட்ட கஷ்டங்கள் நான் மட்டுமே அறிவேன். ஒரு கட்டத்தில் சரத் பாபு சாருக்கும், அம்மாவுக்கும் விவாகரத்து நடந்தது. எனினும் அப்போதும் அவர் ஒவ்வொரு முறையும் என்னிடம் அம்மா குறித்து நலம் விசாரிப்பார். எப்போதுமே அக்கறையாகவே இருப்பார்.
நயன்தாரா உண்மையில் திரையரங்கு பிஸ்னஸில் இருங்குகிறாரா? வெட்டவெளிச்சமான உண்மை!
உண்மையில் அவர் மிகவும் தங்கமான மனிதர். அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாட்களில், அவரைப் பற்றி தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அவசரப்பட்டு பலர் அப்படி பட்ட தகவல்களை வெளியிட்டனர். அந்த சமயத்தில் நான் கடவுளிடம் வேண்டிக் கொண்டது கடவுளே அப்பாவை காப்பாற்று என்று தான். என தெரிவித்துள்ளார்.