சிம்பு நடிப்பில் புதிதாக உருவாக உள்ள திரைப்படம் எஸ்.டி,ஆர் 48. சிம்புவின் 48-வது படமான இதனை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.