நடிகர் அஜித் ஒரு நடிகராக இருந்தாலும், அதை தாண்டி அவருடைய திறமைகள் மூலம் ரசிகர்களையும், மக்களையும் அதிகம் பேச வைக்கும் நபராக இருக்கிறார். பைக்கில் உலக சுற்றி வரவேண்டும் என்பது அவரின் நீண்ட நாள் கனவு. தற்போது தன்னுடைய கனவை நினைவாக்கும் செயலில் தீவிரமாக இறங்கியுள்ளார் அஜித்.
அஜித் அடுத்ததாக, இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க உள்ள, 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு தாமதமாகியதால், படப்பிடிப்பை முடித்த பின்னர்... சுற்றுலா செல்ல திட்டமிட்ட அஜித், அதற்க்கு முன்னதாகவே தன்னுடைய பயணத்தை துவங்கினார். மேலும் மற்றொரு புறம், அஜித்தின் 'விடாமுயற்சி' படத்திற்கான ப்ரீ புரொடக்சன் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.
ஏற்கனவே அஜித், சமையல் கலைஞர் ஒருவருடன்... வெள்ளை நிற தொப்பி அணிந்து பாஸ்தா செய்த புகைப்படம் வைரலானது. இதை தொடர்ந்து கருப்பு நிற ஜாக்கெட்டில் செம்ம ஸ்டைலிஷாக, எடுத்து கொண்ட போட்டோஸ் வெளியாகி அஜித் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றிமுடித்த அஜித், அடுத்தபடியாக கடந்த மாதம் நேபால் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில் தன்னுடைய உலக சுற்றுலாவை மேற்கொண்டார். வெற்றிகரமாக முதற்கட்ட உலக பைக் சுற்றுலாவை முடித்த அஜித், தன்னுடைய அடுத்தக்கட்ட பைக் சுற்றுலாவை வருகிற நவம்பர் மாதம் தொடங்க இருக்கிறார். விடாமுயற்சி படத்தில் நடித்து முடித்த பின்னர் அஜித் இரண்டாம்கட்ட உலக சுற்றுலாவை தொடங்குவார் என்பதை அவரே தன்னுடைய மேலாளர் மூலம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Hansika : டேட்டிங் அழைத்து டார்ச்சர் செய்தாரா பிரபல ஹீரோ? - விஷயம் லீக் ஆனதால் உண்மையை போட்டுடைத்த ஹன்சிகா