நடிகர் நகுல் ஆணுறை வாங்கி வர சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும், அவர் சொன்னதை செய்யாததால் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக துணை இயக்குனர் ஒருவர் பேட்டியில் கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை தேவயானியின் சகோதரர் என்கிற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நகுல். பாய்ஸ் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்த நகுல், பின்னர் காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் ஹீரோவாக மாறினார்.
25
Nakkhul Pair with Sunaina
முதல் படத்திலேயே இவர் நடிப்பு இளவட்ட ரசிகர்களை கவர்ந்தது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற நாக்கு மூக்கா பாடல் மற்றும் உன் தலைமுடி பாடல் ஆகியவை நல்ல வரவேற்பை பெற்றன. சுனைனா - நகுல் ஜோடிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உருவான நிலையில்... மீண்டும் இவர்கள் இருவரும் 'மாசிலாமணி' படத்தில் இணைந்து நடித்தனர். பின்னர் இருவருக்கும் இடையே காதல் தீ பற்றி எரிவதாக யாரோ கொளுத்தி போட, அதன் பின்னர் இருவரும் ஒரு படத்தில் கூட சேர்ந்து நடிக்கவில்லை.
இந்த படத்தை தொடர்ந்து நகுல் கந்தக்கோட்டை, வல்லினம், நான் ராஜாவாக போகிறேன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்களில் நடித்தார். 2018-ஆம் ஆண்டு செய் என்கிற படத்தின் தோல்விக்கு பின்னர் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பட வாய்பில்லாம் இருந்த இவர், இந்த ஆண்டு 'வாஸ்கோடகாமா' என்கிற ஃபேண்டஸி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களேயே பெற்றது.
45
Assistant Director About Nakkhul
இந்நிலையில், துணை இயக்குனர் ஒருவர் கொடுத்துள்ள பேட்டியில்... நகுல் தன்னை படப்பிடிப்பின் போது 3 காண்டம் வாங்கி வர கட்டாய படுத்தியதாகவும், அதை நான் செய்ய மறுத்ததால் தன்னை அந்த படத்தில் இருந்து தூக்கி விட்டதாக தெரிவித்துள்ளார். அந்த படத்திற்காக சம்பளம் வாங்காமல் 2 வருடம் நான் வேலை பார்த்தேன்... ஆனால் என்னுடைய பெயர் கூட அந்த படத்தில் இடம்பெற வில்லை என பிரபல யூ டியூப் பக்கத்திற்கு கொடுத்த பேட்டியில் குமுறியுள்ளார்.
அதே போல் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் வேறு ஒரு நடிகை தான் என்றும், அவர் அட்ஜஸ்ட்மென்ட் போன்றவற்றிக்கு ஒத்து வராததால்... அவரை படத்தில் இருந்து நீக்கி விட்டு வேறு ஒரு நடிகையை கமிட் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேட்டி கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு விஷயத்திற்கும் வெளிப்படையாக விளக்கம் கொடுக்கும் நகுல் இதுகுறித்தும் பேசுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.