அமலா & சோபிதா இடையே உள்ள ஒற்றுமை: நாகார்ஜுனா திருமணத்திற்கு ஓகே சொல்ல இது தான் காரணமா?

First Published | Dec 5, 2024, 5:44 PM IST

நாக சைதன்யா திருமணம் செய்துள்ள, காதலி சோபிதாவின் குடும்ப பின்னணியும், நாகர்ஜுனாவின் இரண்டாவது மனைவி அமலாவின் குடும்ப பின்னணி இடையேயும் உள்ள ஒற்றுமை தான், இந்த திருமணத்திற்கு நாகர்ஜுனா சம்மதம் தெரிவிக்க காரணம் என கூறப்படுகிறது.
 

Naga Chaitanya and Sobhita Wedding

அக்கினேனி குடும்பத்துக்கு மூத்த மருமகளாக மாறியுள்ளார் நடிகை சோபிதா துலிபாலா. கடந்த இரண்டு வருடமாக நாகர்ஜூனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவுடன் டேட்டிங் செய்து வந்த சோபிதா, புதன்கிழமை இரவு (நேற்று) காதலர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம்,  இரவு 8.13 மணிக்கு நடந்து முடிந்தது. இவர்களின் திருமணத்தில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு, வாழ்த்தினர். அதே போல் சோபிதா - சைதன்யா திருமண புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது.
 

Sobhita and Amala Similarities

இந்நிலையில், சோபிதா துலிபாலாவை நாகர்ஜுனா மருமகளாக ஏற்றுக்கொள்ள, அமலாவுக்கும், இவருக்கும்  இடையேயான ஒரு ஒற்றுமை தான் காரணம் என கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. அதாவது அமலா மற்றும் சோபிதா குடும்பங்களுக்கு ஒரு பொதுவான பின்னணி உள்ளது. 

அல்லு அர்ஜுனின் ஆக்ஷன் முதல் செண்டிமெண்ட் வரை! 'புஷ்பா 2' படத்தின் 5 ஹைலைட்ஸ்!
 

Tap to resize

Why Nagarjuna Approval for Naga Chaitanya Marriage?

அமலாவின் தந்தை ஒரு கடற்படை அதிகாரி. அம்மா எழுத்தாளர், சமூக ஆர்வலர், கவிஞர், எப்போதும் பிஸியாக இருப்பாராம். அதேபோல் அப்பாவும் எப்போதும் தனது கடற்படை சேவையில் பிஸியாக இருப்பாராம். இப்படி உயர்ந்த குடும்பம் அவருடையது. இதனால் அவரிடம் ஒரு முறையான வாழ்க்கை முறை, கலாச்சாரம், கண்ணியம் இருப்பதாய் நாகர்ஜுனா உணர்ந்துள்ளார். அமலாவை நாகார்ஜுனா காதலித்து திருமணம் செய்து கொள்ள அவர் நடிகை என்பதை தாண்டி இதுவும் ஒரு காரணம்.

Sobitha Dhulipala Family Background

நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள, சோபிதாவின் குடும்பத்திற்கும் கடற்படை பின்னணி உள்ளது. சோபிதாவின் தந்தை வணிக கப்பல் பொறியாளர். தாய் பள்ளி ஆசிரியை. இவ்வாறு இரண்டு குடும்பங்களுக்கும் பொதுவான சில ஒற்றுமைகள் உள்ளன. இதனால் சோபிதாவின் குடும்பமும் கலாச்சாரத்தை மதிப்பவர்களாகவும், கண்ணியமாகவும் இருந்தனர். எனவே தான் நாக சைத்தாயாவுக்கு சோபிதாவை திருமணம் செய்து வைக்க நாகர்ஜுனா சம்மதித்தார். 

சன் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ! புது ஹீரோ யார் தெரியுமா?
 

Naga Chaitanya and Sobhitha wedding Photos

மாமியார் - மருமகள் இருவருக்கும் எதேர்ச்சியாக உள்ள இந்த ஒற்றுமை ரசிகர்களையும் பிரமிக்க வைத்துள்ளது. நேற்று நடந்த நாக சைதன்யா, சோபிதா துலிபாலா திருமணத்தில் திரைப்பிரபலங்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். சிரஞ்சீவி , ராம் சரண் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். அதே போல் வெங்கடேஷ், ராணா திருமணத்தை நடத்தி வைத்தனர். அக்கினேனி குடும்பம் முழுவதும் அங்கேயே இருந்தது. இவர்களுடன் அல்லு அர்ஜுன் வந்திருந்தார். தமிழ் நடிகர் கார்த்தி, `தண்டேல்` இயக்குனர் சந்து மொண்டேடி ஆகியோரும் திருமணத்தில் கலந்து கொண்டனர். இவர்களுடன் பல பிரபலங்கள் கலந்து கொண்டதாகத் தெரிகிறது. 
 

Latest Videos

click me!