சமந்தா - நாக சைதன்யா விவாகரத்தால் 100 கோடியை இழந்த நாகார்ஜுனா - காரணம் என்ன?

First Published | Oct 21, 2024, 12:38 PM IST

Nagarjuna Net Worth dropped : நாக சைதன்யாவை நடிகை சமந்தா விவாகரத்து செய்து பிரிந்த பின்னர் நாகார்ஜுனாவின் சொத்து மதிப்பு மளமளவென குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Samantha, Nagarjuna, Naga Chaitanya

நடிகை சமந்தாவுக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனில் ஜோடியாக நடித்ததில் இருந்து காதலித்து வந்தனர். சுமார் 7 வருட காதலுக்கு பின் இருவரும் கல்யாணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் கோவாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

Samantha ex husband Naga chaitanya

திருமணத்துக்கு பின்னர் சமந்தா - நாக சைதன்யா இருவருமே சினிமாவில் நடித்து வந்தனர். ஆனால் கடந்த 2021-ம் ஆண்டு நாக சைதன்யா உடன் ஏற்பட்ட மனக்கசப்பால் அவரை பிரிந்து வாழ்ந்து வந்த சமந்தா, அந்த ஆண்டே தாங்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிய உள்ளதாகவும் அறிவித்தார். இவர்களின் விவாகரத்து முடிவு ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. விவாகரத்துக்கு பெற்ற அடுத்த ஆண்டே நடிகை சோபிதா மீது காதல் வயப்பட்டார் நாக சைத்னயா.

இதையும் படியுங்கள்... செல்பி எடுத்தது குத்தமா? நாக சைதன்யா - சோபிதா ஜோடியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்; காரணம் என்ன?

Tap to resize

naga chaitanya, nagarjuna

அவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்த நிலையில், அவர்களுக்கு அண்மையில் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. நாக சைதன்யா - சோபிதா ஜோடியின் திருமணம் விரைவில் நடைபெற உள்ளது. நடிகர் நாகார்ஜுனா தெலுங்கு திரையுலகில் மிகவும் பணக்கார நடிகர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரின் சொத்து மதிப்பு ரூ.3624 கோடி. இவர் சினிமாவை தாண்டி ரியல் எஸ்டேட் பிசினஸில் கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார்.

sobhita, Naga Chaitanya

தற்போது ஒரு ஷாக்கிங் ரிப்போர்ட் வெளியாகி இருக்கிறது. அதன்படி நடிகர் நாகார்ஜுனாவின் சொத்து மதிப்பு 100 கோடிக்கு மேல் சரிவை சந்தித்து உள்ளதாம். நாக சைதன்யா - சமந்தாவின் விவாகரத்து தான் அதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. நாகார்ஜுனா குடும்பத்தில் அதிக சொத்துக்கு அதிபதியாக இருந்து வருவது நாகார்ஜுனா தான். அவரது பெயரில் சுமார் 3 ஆயிரத்து 441 கோடி சொத்துக்கள் உள்ளதாம்.

Nagarjuna Net Worth Dropped

நாகார்ஜுனாவுக்கு அடுத்தபடியாக அவரது மூத்த மகன் நாக சைதன்யாவுக்கு 154 கோடி சொத்துக்கள் உள்ளது. இதையடுத்து நாகார்ஜுனாவின் இரண்டாவது மனைவி அமலாவின் மகனான அகிலுக்கு 59 கோடி சொத்துக்கள் உள்ளதாம். சமந்தா 100 கோடி சொத்துக்கு அதிபதியாக இருந்ததால் அவர் நாக சைதன்யாவை திருமணம் செய்த பின்னர் நாகார்ஜுனாவின் சொத்து மதிப்பு மளமளவென உயர்ந்தது. ஆனால் தற்போது விவாகரத்து பெற்று பிரிந்ததால் சட்டென 100 கோடி சரிவை சந்தித்து இருக்கிறார் நாகார்ஜுனா.

இதையும் படியுங்கள்... விவாகரத்து பயத்தை காட்டி மனைவிக்கு நாகர்ஜுனா போட்ட ஒரே கண்டீஷன்! 30 வருடமாக கஷ்டப்பட்டு காப்பாற்றும் அமலா!

Latest Videos

click me!