தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர், கடந்த 2021-ம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். இதையடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் நடிகர் நாக சைதன்யா பற்றி அடிக்கடி காதல் கிசுகிசுக்களும் பரவி வருகின்றன. குறிப்பாக நடிகையுடன் டேட்டிங் சென்றதாகவும் செய்திகள் வெளியானது.