AK62 படத்திற்கு முன்பே.. டிஜிட்டலில் வெளியாகும் அஜித்தின் வேற லெவல் படம்! ரசிகர்களுக்கு காத்திருக்கு ட்ரீட்!

First Published | Mar 28, 2023, 1:24 PM IST

அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிப்பில் வெளியான வேற லெவல் திரைப்படம் டிஜிட்டல் தரத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
 

நடிகர் அஜித் ஹீரோவாக நடித்து வெளியான முதல் திரைப்படம், 'அமராவதி'. 1993-ம் ஆண்டு சோழா பொன்னுரங்கம் தயாரித்து, வெளியான இந்த படத்தில், அஜித் அரும்பு மீசையுடன் நடித்திருப்பார். காதல் காவியமாக உருவான இந்த படத்தில், அஜித்துக்கு ஜோடியாக சங்கவி நடித்திருப்பார்.  செல்வா இப்படத்தை இயக்கியிருந்தார்.

'அமராவதி' படம் வெளியாகி எப்படி 30 ஆண்டுகள் நிரைவடைய போகிறதோ... அதே போல் அஜித்தும், கதாநாயகனாக திரையுலகில் காலடி எடுத்து வைத்து 30 வருடங்கள் நிறைவடைய போகிறது.

தொலைந்து போன நகையில் 50 பவுனை குறைத்து கூறி ஐஸ்வர்யா ! கிளம்பிய புது சர்ச்சை? கடுப்பில் சூப்பர் ஸ்டார்!

Tap to resize

ஆரம்பத்தில் அஜித்தின் குணம் பற்றி பெரிதாக வெளியே... தெரியாது என்றாலும் தற்போது அவரின் எளிமை, அன்பு, கொடை என அனைத்து நற்குணங்களுக்கு என பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இந்நிலையில் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு, வருகின்ற மே மாதம் முதல் தேதி, அவரின் முதல் படமான "அமராவதி" படத்தை டிஜிட்டலில் வெளியிட உள்ளதாக இப்படத்தின் தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் அறிவித்துள்ளார்.

மேலும் இதற்கான பணிகள், பிரசாத் ஸ்டுடியோவில், இரவு பகலாக நவீன தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் ஆக்கப்பட்டு வருவதாகவும், மேலும் தற்போதைய இசை வடிவில், புதிய பின்னணி இசை அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கிழிந்த பேன்டில்... துளியும் மேக்கப் போடாமல் அழகில் மயக்கும் பிரியங்கா மோகன்! கியூட் போட்டோ ஷூட்!

அஜித்தின் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடும் விதமாக, மே முதல் தேதி, 'பிறந்தநாள் பரிசாக' அமராவதி திரைக்கு வருகிறது என்கிறார் சோழா பொன்னுரங்கம். சமீபத்தில் ரஜினியின் 'பாபா' திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இப்படத்திற்கும் நல்ல கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

click me!