தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா, இவரும், நடிகை சமந்தாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின்னரும் இருவரும் சினிமாவில் கவனம் செலுத்தி வந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாங்கள் விவாகரத்து செய்துவிட்டதாக ஒன்றாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.