வரிசையாக 4 பிரம்மாண்ட படங்கள்... விஜய், அஜித்தை ஓரங்கட்டி நம்பர் 1 இடத்தை பிடிக்க கமல் போட்ட மாஸ்டர் பிளான்

First Published | Jul 5, 2023, 12:55 PM IST

நடிகர் கமல்ஹாசன் கைவசம் 4 பிரம்மாண்ட படங்கள் உள்ள நிலையில், அப்படத்திற்காக அவர் வாங்கியுள்ள் சம்பளம் குறித்த தகவலை தற்போது பார்க்கலாம்.

kamalhaasan

விக்ரம் படத்திற்கு முன் 4 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த கமல்ஹாசன், விக்ரம் படத்தின் மூலம் தரமான கம்பேக் கொடுத்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் கடந்தாண்டு திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படம் ரூ.450 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸிலும் சக்கைப்போடு போட்டது. விக்ரம் படத்திற்கு பின் கமல்ஹாசனின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயந்துவிட்டது. தற்போது அவர் கைவசம் உள்ள படங்களைப் பற்றி பார்க்கலாம்.

Shankar, Kamalhaasan

இந்தியன் 2

விக்ரம் படத்திற்கு முன்னரே கமல்ஹாசன் கமிட் ஆன திரைப்படம் தான் இந்தியன் 2. இப்படம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் நிலையில், தற்போது ஒரு வழியாக ஷூட்டிங் முடிவுக்கு வர உள்ளது. ஷங்கர் இயக்கும் இந்த பிரம்மாண்ட திரைப்படம் வருகிற 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி உள்ளார்.

Tap to resize

Nag Ashwin, Kamalhaasan

புராஜெக்ட் கே

கமல்ஹாசன் சர்ப்ரைஸாக கமிட் ஆன திரைப்படம் தான் புராஜெக்ட் கே. பிரபாஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். இப்படத்தில் வில்லனாக நடிக்க கமல்ஹாசன் கமிட் ஆகி உள்ளார். இப்படத்தில் நடிக்க 25 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ள நடிகர் கமல்ஹாசனுக்கு ரூ.130 கோடி சம்பளத்தை வாரி வழங்கி உள்ளது படக்குழு.

இதையும் படியுங்கள்... 3 ஹீரோயின்கள்... ரூ.100 கோடி பட்ஜெட் - பூஜையுடன் ஆரம்பமானது ஜெயம் ரவியின் பான் இந்தியா படம் ‘ஜீனி’

kamalhaasan, H Vinoth

எச்.வினோத் படம்

கமல்ஹாசனின் கைவசம் உள்ள மற்றுமொரு திரைப்படம் தான் கே.ஹெச் 233. இப்படத்தை துணிவு படத்தின் இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இப்படத்திற்கான அறிவிப்பு நேற்று தான் வெளியானது. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இப்படத்தின் ஷுட்டிங் தொடங்கும் முன்னே ரூ.125 கோடி வரை பிசினஸ் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

kamalhaasan, Maniratnam

மணிரத்னம் படம்

எச்.வினோத் படத்தை முடித்ததும் மணிரத்னத்துடன் கூட்டணி அமைக்க உள்ளார் கமல். இப்படமும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக உள்ளதாம். இதற்கான ஸ்கிரிப்ட் அமைக்கும் பணிகளை இயக்குனர் மணிரத்னம் தற்போது மேற்கொண்டு வருகிறாராம். இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசனும், மணிரத்னமும் தயாரிக்க உள்ளனர்.

இப்படி வரிசையாக 4 பிரம்மாண்ட படங்களை வைத்து கமல், இந்த படங்கள் அனைத்தும் வெளியான பின்னர் தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகர் என்கிற அந்தஸ்தை எட்டிவிடலாம் என்கிற ஐடியாவில் இருக்கிறாராம். விஜய். அஜித் ஆகியோர் ஒரு படத்தை மட்டுமே வைத்துக்கொண்டு நடித்து வருவதால், அவர்களை ஓரங்கட்டவே கமல் இப்படி அதிரடி காட்டி வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... லைகாவுடன் அடுத்த படம்.. டூயல் ஹீரோ சப்ஜெக்டுடன் களமிறங்கும் 2018 பட இயக்குனர் - யார் அந்த இரு ஹீரோஸ்?

Latest Videos

click me!