3 ஹீரோயின்கள்... ரூ.100 கோடி பட்ஜெட் - பூஜையுடன் ஆரம்பமானது ஜெயம் ரவியின் பான் இந்தியா படம் ‘ஜீனி’

Published : Jul 05, 2023, 12:02 PM IST

நடிகர் ஜெயம் ரவியின் 32-வது படமான ஜீனி படத்தின் பூஜை இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது, இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

PREV
14
3 ஹீரோயின்கள்... ரூ.100 கோடி பட்ஜெட் - பூஜையுடன் ஆரம்பமானது ஜெயம் ரவியின் பான் இந்தியா படம் ‘ஜீனி’
Genie movie

பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நடிகர் ஜெயம் ரவியின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. அவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. அவர் நடிப்பில் அடுத்ததாக இறைவன் என்கிற திரைப்படம் ரிலீஸ் ஆகி உள்ளது. அஹமத் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 25-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

24
Genie movie

இதுதவிர எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார். ஜெயம் ரவி. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது ஜெயம் ரவி புதிதாக கமிட் ஆகி இருக்கும் மற்றுமொரு பிரம்மாண்ட திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தான் தற்போது வெளியாகி இருக்கிறது.

இதையும் படியுங்கள்... எல்.சி.யூ.வில் தனுஷ்... திருப்பதியில் மொட்டை அடித்தது லியோ படத்துக்காக தானா? சர்ப்ரைஸ் அப்டேட் இதோ

34
Genie movie

அதன்படி ஜீனி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை புவனேஷ் அர்ஜுனன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார். இவர் இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கப்பி, கீர்த்தி ஷெட்டி ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக அறிவித்து உள்ளனர்.

44
Genie movie

ஜீனி படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்கிறார். இப்படத்தை அவர் சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜீனி திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக தயாராக உள்ளதாம். இப்படத்திற்கு இன்று பூஜை போடப்பட்டது. இதில் நடிகர் ஜெயம் ரவி, நடிகைகள் கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி, வாமிகா கப்பி உள்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர். நடிகை தேவையானியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இதையும் படியுங்கள்... உலக பிகினி தின ஸ்பெஷல்... டூபீஸ் உடையணிந்து அதகளமான கவர்ச்சி போஸ் கொடுத்த தமிழ் நடிகைகளின் ஹாட் கிளிக்ஸ் இதோ

Read more Photos on
click me!

Recommended Stories