உலக பிகினி தின ஸ்பெஷல்... டூபீஸ் உடையணிந்து அதகளமான கவர்ச்சி போஸ் கொடுத்த தமிழ் நடிகைகளின் ஹாட் கிளிக்ஸ் இதோ

First Published | Jul 5, 2023, 10:30 AM IST

உலக பிகினி தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், டூ பீஸ் உடையணிந்தபடி போஸ் கொடுத்த தமிழ் நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பிகினி அல்லது டூ பீஸ் என அழைக்கப்படும் நீச்சல் உடை கடந்த 1946-ம் ஆண்டு லூயிஸ் ரியர்டு என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த உடையை அவர் ஜூலை மாதம் 5-ந் தேதி கண்டுபிடித்ததால், ஒவ்வோரு ஆண்டு அந்த தினத்தை உலக பிகினி தினமாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். பிகினி உடை அதிகளவில் பேமஸ் ஆனது சினிமா மூலம் தான். ஆதனால் பிகினி உடையணிந்து வந்த தமிழ் சினிமாவில் நடிகைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நயன்தாரா

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, தற்போது கவர்ச்சி வேடங்களில் நடிக்காவிட்டாலும், ஆரம்ப காலகட்டத்தில் அவர் பிகினி உடையணிந்தே நடித்திருக்கிறார். அஜித்தின் பில்லா படத்தில் அவர் பிகினி உடையணிந்து நடித்தபோது எடுத்த புகைப்படம் தான் இது.

Tap to resize

நமீதா

தமிழ் சினிமாவில் கிளாமர் குயினாக வலம் வந்த நமீதா. இவர் சினிமாவில் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அஜித்தின் பில்லா, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் போன்ற படங்களில் பிகினி உடையணிந்து நடித்திருந்தார்.

அனுஷ்கா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்காவும் பிகினி உடையணிந்து சினிமாவில் நடித்திருக்கிறார். இவர் பில்லா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பிகினி உடையணிந்து நடித்தபோது எடுத்த புகைப்படம் இது.

காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வந்த காஜல் அகர்வால், சினிமாவில் பிகினி உடையணிந்து நடிக்கவில்லை என்றாலும், தன்னுடைய குடும்பத்துடன் சுற்றுலா சென்றபோது பிகினி உடையணிந்தபடி நீச்சல் குளத்தில் குளித்தபோது எடுத்த புகைப்படம் தான் இது.

திரிஷா

சவுத் குயின் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் திரிஷாவும் பிகினி உடையணிந்து நடித்திருக்கிறார். சுந்தர் சி இயக்கிய அரண்மனை 2 படத்தின் பாடல்காட்சிக்காக அவர் பிகினி உடையில் நடித்திருந்தார்.

சமந்தா

நடிகை சமந்தா வெளிநாடுகளில் சுற்றுலா செல்லும் போது பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை பதிவிடுவார். அதேபோல் சூர்யாவின் அஞ்சான் படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் பிகினி உடையில் நடித்திருந்தார் சமந்தா.

மாளவிகா மோகனன்

சினிமாவில் பெரியளவில் கவர்ச்சி வேடங்களில் நடிக்காத நடிகை மாளவிகா மோகனன், சமூக வ்லைதளங்களில் அப்படியே உல்டாவாக இருப்பார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை திறந்தாலே கவர்ச்சி அருவியாய் கொட்டும். அந்த வகையில் மாலத்தீவுக்கு சென்றபோது பிகினி உடையில் அவர் எடுத்த புகைப்படம் தான் இது.

திவ்ய பாரதி

பேச்சிலர் படம் மூலம் பேமஸ் ஆன நடிகை திவ்ய பாரதி, மாலத்தீவுக்கு விசிட் அடித்தபோது அங்குள்ள கடற்கரையில் பிகினி உடையணிந்து கவர்ச்சி குளியல் போட்ட போது எடுத்த புகைப்படம் தான் இது.

தமன்னா

ரசிகர்களால் மில்க் பியூட்டி என செல்லமாக அழைக்கப்படும் நடிகை தமன்னா, கவர்ச்சி வேடங்கள் ஏற்று பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். அவர் பிகினி உடையில் நடத்திய போட்டோஷூட் தான் இது.

அமலா பால்

ஆடை படத்தில் ஆடையே அணியாமல் நிர்வாணமாக நடித்து அதிர்ச்சி கொடுத்த அமலா பால், சுற்றுலா சென்றபோது நீச்சல் உடையணிந்தபடி நடத்திய கவர்ச்சி போட்டோஷூட் இது.

சாக்‌ஷி அகர்வால்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன நடிகை சாக்‌ஷி அகர்வால், ஹவாய் தீவுக்கு சுற்றுலா சென்றபோது அங்குள்ள கடற்கரையில் கருப்பு நிற பிகினி உடையணிந்து போட்டோஷூட் நடத்தினார்.

அனசுயா பரத்வாஜ்

புஷ்பா படத்தில் வில்லியாக நடித்து மிரட்டிய நடிகை அனசுயா பரத்வாஜ், திருமணத்துக்கு பின்னும் கவர்ச்சி காட்டி ரசிகர்களை மிரள வைத்து வருகிறார். சமீபத்தில் தாய்லாந்துக்கு சென்றபோது அவர் எடுத்த பிகினி போட்டோஷூட் தான்  இது.

மிருணாள் தாக்கூர்

சீதா ராமம் படத்தில் சீதா மகாலட்சுமியாக அடக்க ஒடுக்கமாக நடித்த மிருணாள் தாக்கூரும் பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். கோவாவுக்கு சுற்றுலா சென்றபோது அவர் பதிவிட்ட பிகினி புகைப்படம் தான் இது.

Latest Videos

click me!