நாக சைதன்யாவின் பான் இந்தியா கனவில் விழுந்த மண்ணு; வசூலில் தத்தளிக்கும் தண்டேல்!

Published : Feb 10, 2025, 12:53 PM IST

நாக சைதன்யா 'தண்டேல்' படத்தின் மூலம் பான்-இந்தியா நட்சத்திரம் என்கிற அந்தஸ்தை அடைய ஆசைப்பட்ட நிலையில், அவருடைய வசூல் நிலவரங்கள் அவருக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  

PREV
16
நாக சைதன்யாவின் பான் இந்தியா கனவில் விழுந்த மண்ணு; வசூலில் தத்தளிக்கும் தண்டேல்!
பான் இந்தியா வெற்றியை தவற விட்ட தண்டேல்:

சமீப காலமாக இளம் ஹீரோக்கள் பலரும் பான் இந்தியா அளவிலான படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இப்படி எடுக்கப்படும் படங்கள், முன்னணி ஹீரோக்களுக்கு மட்டுமே மற்ற மொழிகளிலும், உலக அளவிலும் நல்ல வரவேற்பை பெறுகிறது. 'காந்தாரா', 'மஞ்சுமல் பாய்ஸ்' போன்ற ஒரு சில படங்களே மற்ற மொழிகளிலும் மாயாஜாலத்தை உருவாக்குகின்றன. 

26
நாகர்ஜூனாவால் கூட பான் இந்தியா ஸ்டாராக உருவாக முடியவில்லை:

இதுவரை அக்கினேனி குடும்பத்தில் யாரும் பான்-இந்தியா நட்சத்திரங்களாக வளரவில்லை. நாகார்ஜுனா கடந்த காலத்தில் முயற்சித்தாலும், வெறும் ஓகே என்று சொல்லிக் கொண்டாரே தவிர, அடுத்த கட்டத்திற்குச் செல்லவில்லை. அவர் தனியாக நடித்த படங்கள் பான்-இந்தியா சந்தையை உருவாக்கவில்லை. அதனால் தண்டேலுடன் நாக சைதன்யா வெற்றி பெற்று பான்-இந்தியாவில் முன்னணி நடிகராக உருவாகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' முதல் விமர்சனம் கூறிய பிரபலம்; பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரா?

36
தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நாக சைதன்யா:

பான் இந்தியா படங்களில் நடிப்பதன் மூலம், தங்களின் மார்க்கெட் பெரிய அளவில் விரிவடையும் என்று எதிர்பார்க்கிறார்கள். இருப்பினும், அவர்களின் சொந்த மொழியில் இவர்களுக்கு கிடைக்கும் வரவேற்பை விட, மற்ற மொழிகளில் வரவேற்பை பெற தவறி விடுகின்றன. அந்த வகையில், நாக சைதன்யாவின் பான் இந்தியா கனவோடு வெளியான 'தண்டேல்' திரைப்படம் தெலுங்கில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும்,  தமிழ்,மலையாளம், இந்தி மொழிகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறிவிட்டது. 
 

46
மற்ற மொழிகளில் தோல்வியை தழுவிய தண்டேல்:

விளம்பரங்களுக்காக பெரிய அளவில் செலவு செய்த போதிலும், அதற்கான பலன் இல்லை என்று வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தி சந்தையில் முதல் நாளில் இந்தப் படம் 15 லட்சம் மட்டுமே வசூலித்ததாகவும், அது மிகவும் குறைவு என்றும்... அதே போல் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் சில லட்சங்கள் மட்டுமே இந்த படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டில் இதுவே முதல் முறை; 'விடாமுயற்சி' செய்த சாதனை கொண்டாடும் ரசிகர்கள்!
 

56
தண்டேல் திரைப்படத்தின் வசூல்:

நாக சைதன்யா - சாய் பல்லவி நடிப்பில், கடந்த வாரம் வெள்ளி கிழமை அன்று வெளியான 'தண்டேல்' திரைப்படம், மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 62.37 கோடிக்கு மேல் வசூலித்ததாக தயாரிப்பாளர்கள் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆனால், அந்த அளவு வசூல் இல்லை என்று சமூக ஊடகங்களில் சிலர் விமர்சனங்களை வெளிப்படுத்தி வருவதையும் பார்க்க முடிகிறது.
 

66
நாக சைதன்யா கனவில் விழுந்த மண்ணு:

அதே சமயம், நடிகர் நாக சைதன்யாவின் வாழ்க்கையில் அதிக வசூல் செய்த திரைப்படமாக 'தண்டேல்' அமைந்திருந்தாலும். தெலுங்கு மொழியில் மட்டும் தான் இந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளதே தவிர மற்ற மொழிகளில் இப்படம் தோல்வியை தழுவி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் ஒரு தெலுங்கு ஹீரோ என்பதை நிரூபித்திருந்தாலும், பான் இந்தியா ஸ்டார் ஆகவேண்டும் என்கிற நாக சைத்தாயாவின் கனவில் மண்ணு விழுந்துள்ளதாகவும், மற்ற மொழிகளில் தண்டேல் தத்தளித்து வருவதாக கூறப்படுகிறார்கள்.

கொஞ்சம் கொஞ்சமாக சரிவிலிருந்து மீண்டு வரும் விடாமுயற்சி; 4 நாட்களில் ரூ.92 கோடி வசூல்!
 

click me!

Recommended Stories