ராம் இயக்கிய தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப் பிரபலம். அன்பு சொட்டு சொட்ட படைத்திருந்தார் முத்துக்குமார். ஆனந்தயாழை, யாருக்கும் தோல்வி இல்லை ஃபர்ஸ்ட் லாஸ்ட் என ஒவ்வொரு பாடல்களும் இன்றளவும் பிரபலமாக உள்ளன.
மேலும் செய்திகளுக்கு..கேப்டன் மில்லர் படத்துக்காக லுக்கை மாற்றிய தனுஷ்... வெறித்தனமா இருக்கே என சிலாகிக்கும் ரசிகர்கள்
கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான வெயில் படத்தில் இவர் எழுத்து வண்ணத்தில் உருவான வெயிலோடு விளையாடு பாடல் நம் சிறுபிள்ளை பருவத்திற்கே அழைத்து சென்று விட்டது. ஒவ்வொரு வார்த்தைகளும் நம் ஆட்டோகிராப் ஆகவே அமைந்தது. அதோடு உருகுதே மருகுதே என காதல் பொங்கும் பாடல் வரிகளை தந்து இருந்தார் நா.முத்துக்குமார்.
கோவில் படத்தில் கல்லூரிக்கு போறோம், கில்லி-சூர தேங்கா, அருள் - உக்கடத்து பாபடமே, புன்னக்குன்னு, 7ஜி ரெயின்போ காலனி, காதல், மன்மதன் - காதல் வளர்த்தேன் என காதல்,சோகம், நட்பு, பிரிவு என மனிதத்தின் மொத உணர்வுகளுக்கு எழுத்து வடிவம் கொடுத்தவர் நா. முத்துக்குமார்.