திரை பிரபலங்கள் திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தார். தமிழகத்தில் வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
தமிழகத்தில் திரை பிரபலங்கள், அரசியல்வாதிகள், பள்ளிகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா, நடிகை திரிஷா என பல்வேறு பிரபலங்களில் வீடுகளுக்கு மிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
மர்ம நபர்கள் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நிலையில், அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். இந்த நிலையில், திரை பிரபலங்கள் நடிகை திரிஷா, நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் மணிரத்னம் வீடுகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
34
விரைந்து சென்று காவல்துறை சோதனை
இதுதொடர்பாக டிஜிபி அலுவலகத்துக்கு இமெயில் அனுப்பிய மர்ம நபர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திரிஷா வீடு, அண்னாநகர் பகுதியில் உள்ள விஷால், மணிரத்னம் வீடுகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் பகீர் கிளப்பியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் விரைந்து சென்று வீடுகளில் சோதனை நடத்தினார்கள். அங்கு வெடிகுண்டுகள் ஏதும் இல்லாததால் இது வெறும் புரளி என்பது தெரியவந்தது.
திரிஷா வீட்டில் ஏற்கெனவே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், இன்று 2வது முறையாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக பெரிய பாலியல், கொளை குற்றங்களில் ஈடுபடுபவர்களை தமிழக காவல்துறையினர் தங்களின் திறமையால் உடனடியாக பிடித்து விடுவார்கள்.
ஆனால் இந்த வெடிகுண்டு மிரட்டல்களை விடுப்பவர்கள் காவல்துறையிருக்கு பெரும் தலைவலியாக உள்ளனர். மிரட்டல் விடுக்கும் இமெயில் ஐபி அட்ரஸ் மாறி மாறி வருவதால் மர்ம நபர்களை பிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.